Tank Exercise by Indian Army in River File Pic (Photo Credit: @VivekSi85847001 X)

ஜூன் 29, லடாக் (Ladakh): லடாக் எல்லையில் பணியாற்றி வரும் இந்திய இராணுவத்தினர், அங்குள்ள இந்திய நிலப்பரப்புகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிரிகள் ஒருவேளை அவ்வழியே ஊடுருவினால் போர்க்கால நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது உண்டு. அந்த வகையில், நேற்று இரவு லடாக் பகுதியில் உள்ள டவுலத் பெக் ஒலடியே (Daulat Beg Oldie) என்ற இடத்தில உள்ள ஆற்றில் பயிற்சி மேற்கொண்டனர்.

நீரின் பிடியில் சிக்கி பலி:

ஆற்றின் குறுக்கே இராணுவ டாங்கியுடன் கடப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென இராணுவ டாங்கியை மூழ்கடிக்கும் அளவு வெள்ளம் பாய்ந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத இராணுவ வீரர்கள் பதறிப்போன நிலையில், அவர்கள் நீரின் பிடியில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். IND Vs SA Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு.!

இதனால் அவர்களின் நிலை குறித்த ஐயம் எழுந்த நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஐவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 ஜவான்கள், ஒரு ஜெசிஓ என ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உட்பட பிற களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வேறொரு காணொளி: