Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.!

நடப்பு ஆண்டில் கூகுள் நிறுவனம் தனது Play Store-ல், சிறந்த செல்போன் விளையாட்டுகள் உட்பட பிற செயலிகள் தரவுகளை வெளியிட்டுள்ளது.

Google Play Logo (Photo Credit: Google Play)

நவம்பர் 30, புதுடெல்லி (New Delhi): 2023ம் ஆண்டை கடந்து, 2024ம் ஆண்டை நாம் வரவேற்க தயாராகிவிட்டோம். இன்னும் 31 நாட்களே 2024ம் ஆண்டுக்குள் உலகத்தவர் அடியெடுத்து வைக்க காத்திருக்க வேண்டும். புதிய ஆண்டு உலக மக்களுக்கு வளர்ச்சிப்பாதையில் அமைந்திட பலரும் வேண்டி வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் கூகுள் நிறுவனம் தனது Play Store செயலியில், சிறந்த செல்போன் விளையாட்டுகள் (Play Store’s Best Apps and Games of 2023) உட்பட பிற செயலிகள் தரவுகளை வழங்கி இருக்கிறது. 2023ம் ஆண்டில் மக்களிடம் பேராதரவு பெற்ற பல்வேறு வகை பிரிவுகளில் உள்ள செயலிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 2023ல் மக்களிடம் பிரதான வரவேற்பை பெற்ற விளையாட்டு, தனிநபர் பாதுகாப்பு, தனிநபர் வளர்ச்சி, வணிகம் சார்ந்த தேவைகள் உட்பட பல்வேறு பிரிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, Level SuperMind செயலி Google Play Store-ல் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மக்களின் நினைவாற்றலை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence AI) திறன் கொண்டு அதிகப்படுத்த உதவியுள்ளது. மருத்துவம், உடல்நலம், உடற்பயிற்சி, உறக்கம் சார்ந்த கதைகளுக்கு Level Supermind செயலி மக்களுக்கு பயன்பட்டுள்ளது. Clash Between BRS & Congress Party Supporters: வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் முற்றியதில், பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீர் மோதல்: ஓடவிட்ட அதிகாரிகள்.! 

சிறந்த செயலி AI பிரிவில் Stimuler செயலி மக்களுக்கு ஆங்கிலம் சார்ந்த மொழியை கற்பித்த பிரிவில் வெற்றி அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பேச்சு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கி பயனர்களுக்கு உதவியுள்ளது. Swift Chat செயலியானது AI தொழில்நுட்பத்துடன் மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு பல இந்திய மொழிகளில் பயிற்றுவிக்க உதவி செய்துள்ளது.

Threapy THAP செயலி உடற்பயிற்சி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்காக பயனர்களுக்கு உதவி, உடற்பயிற்சி செய்வோரின் மனரீதியான பாதுகாப்பை உறுதி செய்து, மனஅழுத்தத்தை குறைக்க உதவி செய்ததற்காக Therapy App பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதான இந்தியர்களின் தீர்வாகவும் THAP செயலி இருந்துள்ளது.

விளையாட்டு சார்ந்த செயலிகள் பிரிவில், Monopoly Go செயலி சிறந்த விளையாட்டுக்கான முதல் இடத்தை பெற்றுள்ளது. 2023ம் ஆண்டின் பெருவாரியான மாதங்களில் Monopoly Go விளையாட்டு, பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தேர்வு தொடர்பான பிரிவில் Subway Surfers crew விளையாட்டு முதல் இடத்தை பெற்றுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement