நவம்பர் 30, ரங்காரெட்டி (Rangareddy): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 35,655 க்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில், 3.26 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ளனர். மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதற்றமான வாக்குசாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 03ம் தேதி வெளியாகும். இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், ஆளுங்கட்சியாக பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 11 மணி நிலவரப்படி, 11% வாக்குகள் பதிவாகியுள்ளது. Baby Rescued Under the Rubble In Gaza: கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவித்த பச்சிளம் பெண் குழந்தை: 37 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)