GPay UPI Free: ரூ.200 பணம் இனி UPI PIN பதிவிடாமலேயே G-Pay-ல் அனுப்பலாம்; பயனர்களுக்கு இன்பச்செய்தி கொடுத்த கூகுள் பே.!
கூகுள் பே செயலியை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களின் வங்கிக்கணக்கை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக இணைந்து பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம்.
ஜூன் 22, தொழில்நுட்பம் (Technology News): இந்தியாவில் 150 மில்லியன் பயனர்கள் உபயோகம் செய்யும் கூகுள் பே (Google Pay), சர்வதேச அளவில் 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா கூகுள் பே-வின் மிகப்பெரிய பயனாளர்கள் அங்கமாக செயல்பட்டு வருகிறது.
கூகுள் பே (G Pay) செயலியை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களின் வங்கிக்கணக்கை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக இணைந்து பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம். கூகுள் பே அவ்வப்போது தனது பயனர்களுக்கு சிறப்பான அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது கூகுள் பே UPI Pay Free என்ற அம்சத்தை தனது பயனர்களுக்கு வழங்கியுள்ளது. அதேபோல, கிரெட் கார்டுகளை இணைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPI Pay Free அமைப்பு மூலமாக நமது வாலட்டில் ரூ.2000 பணத்தை முன்னதாகவே அனுப்பி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ரூ.2000ல் ரூ.200 வரை அனுப்பும் பணத்திற்கு எவ்வித UPI PIN பதிவிட தேவையில்லை.
நேரடியாக நாம் பணம் அனுப்ப வேண்டிய நபரின் வங்கிக்கணக்கை தேர்வு செய்து, UPI Free வால்ட் மூலமாக பணம் அனுப்பி கொள்ளலாம். இந்த பணபரிமாற்றத்தின் மூலமாக நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்தை 2 முறை என ரூ.4 ஆயிரம் வரை அனுப்பலாம்.