IPL Auction 2025 Live

Budget Smart Phones Under Rs.25,000: பட்ஜெட் ரூ. 25.000-குள் உள்ள ஸ்மார்ட் போன்கள் - விவரம் உள்ளே..!

25,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்

Realme Narzo | Nothing Phone 2a | Tecno Pova 6 Pro (Photo Credit: @imujjwaal @raywongy @NimishAndAkriti X)

ஏப்ரல் 10, சென்னை (Technolgy News): இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நடுத்தர வர்க்க மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை உள்ள ஸ்மார்ட் போன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ரியல்மி நர்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro): ரியல்மி நிறுவனத்தின் நர்ஸோ மாடலை பொறுத்தமட்டில், அதன் விலை மற்றும் தரத்திற்காக நல்ல வரவேற்பு பெற்றது. 8 GB ரேம், 128 GB ஸ்டோரேஜ், 16 MP செல்பி கேமிரா, 50 MP + 8 MP +2 MP +2 MP பிரைமரி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 Octa Core அம்சங்கள் இருக்கின்றன. 6.67 இன்ச் 120 Hz அமோல்ட் (AMOLED) டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி திறன், 67 W சார்ஜர், ஆண்ட்ராய்டு வி14 OS, 5G நெட்ஒர்க் அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பல அம்சங்கள் கொண்ட ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.17,999 முதல் ரூ.19,999 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ ஆக்டா கோர், 50+50 MP பின்புற கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன. 6.7″ (17.02 செமீ) 120Hz அமோல்டு டிஸ்ப்ளே (AMOLED Display), 5000 mAh பேட்டரி திறன், 45W ஃபாஸ்ட் சார்ஜர், ஆண்ட்ராய்டு வி14 ஓஎஸ் 5G நெட்ஒர்க் மற்றும் கைரேகை சென்சார் அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பலவிதமான அம்சங்கள் கொண்ட நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ டி3 (Vivo T3): 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ஆக்டா கோர், 50+2+2 MP பின்புற கேமரா, 16 MP செல்பி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. 6.67″ (16.94 செமீ) 120Hz அமோல்ட் (AMOLED) டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி திறன், 44W ஃபாஸ்ட் சார்ஜர், ஆண்ட்ராய்டு வி14 ஓஎஸ் 5G நெட்ஒர்க் அமைப்பும் அதோடு கைரேகை சென்சாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தை விலையில் ரூ, 19,999 முதல் ரூ, 21,999 வரை உள்ள விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Old Woman Death In Fire Accident: 75 வயது மூதாட்டி உடல் கருகி பலி; தீயை அணைக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus): மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ஆக்டா கோர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 50+8+2 MP பின்புற கேமரா, 16 MP செல்பி கேமரா ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. 6.67″ (16.94 செமீ) 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி திறன், 67W ஃபாஸ்ட் சார்ஜர், ஆண்ட்ராய்டு வி14 ஓஎஸ் 5G நெட்ஒர்க், கைரேகை சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் ரூ. 19,950 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro): 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டா கோர், 108+2+0.08 எம்பி பின்புற கேமரா, 32 எம்பி செல்பி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. 6.78″ (17.22 செமீ) 120Hz AMOLED டிஸ்ப்ளே, 6000 mAh பேட்டரி திறன், 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு வி14 ஓஎஸ், 5G நெட்ஒர்க் மற்றும் கைரேகை சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. டெக்னோ போவா 6 ப்ரோ சந்தையில் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சியாமி ரெட்மி நோட் 13 ப்ரோ (Xiaomi Redmi Note 13 Pro): ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 2 ஆக்டா கோர், 200+8+2 MP பின்புற கேமரா, 16 எம்பி செல்பி கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 6.67″ (16.94 செமீ) 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5100 mAh பேட்டரி திறன், 67W ஃபாஸ்ட் சார்ஜர், ஆண்டராய்டு வி13 OS, 5G நெட் ஒர்க், கைரேகை சென்சார் அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தை விலையில் ரூ. 23,999 விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo): 8 ஜிபி ரேம் | 128 ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் டைமன்சிட்டி 7030 ஆக்டா கோர், 50+13 MP பின்புற கேமரா, 32 MP செல்பி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. 6.55″ (16.64 செமீ) 144Hz P-OLED டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி திறன், 68W ஃபாஸ்ட் சார்ஜர், Android v13 OS, 5G நெட்ஒர்க் மற்றும் கைரேகை சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. சந்தையில் ரூ. 23,788 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒன்பிளஸ் நார்டு சிஇ 4 5ஜி (OnePlus Nord CE 4 5G): ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ஆக்டா கோர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 50+8+8+5 MP பின்புற கேமரா, 16 MP செல்பி கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன. 6.7″ (17.02 செமீ) 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5500 mAh பேட்டரி திறன், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு வி14 OS, 5G நெட்ஒர்க் மற்றும் கைரேகை சென்சார் அமைப்பும் உள்ளது, இந்திய சந்தை விலையில் ரூ. 24,999 விற்பனை செய்யப்படுகிறது.