ஏப்ரல் 10, செந்துறை (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பட்டம்மாள் (வயது 75). இவருடைய சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் விளைவித்து அறுவடை செய்துள்ளார். இதனையடுத்து, சோளதட்டைகளை (Cornfield Fire) தீயிட்டு எரித்துள்ளார். Fantastic Catch By Pat Cummins: அற்புதமாக கேட்ச் பிடித்த பேட் கம்மின்ஸ் – பஞ்சாப் அணி போராடி தோல்வி..!

சோளத்தட்டைகள் மளமளவென எரிந்து பக்கத்து கொல்லையில் இருந்த மக்காச்சோள தட்டைகள் மீது பரவி எரிய தொடங்கியுள்ளது. இதனால், பட்டம்மாள் தீயை அணைக்க வேப்பமரத்தின் தழை குச்சிகளை உடைத்து அதனை அணைக்க முற்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த கருப்பையா கோவிலுக்கும் தீ வேகமாக பரவி சென்றது. இதனை பார்த்த பட்டம்மாள் தீயை அணைக்க முயலும்போது அவர் மீது தீப்பற்றியது. இதில், பட்டம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து செந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீயை அணைக்க முயன்ற போது, மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.