Microsoft Edge Browser: எட்ஜ் ப்ரௌசர் பயன்படுத்துவோரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் அப்டேட் இதோ.!

பல அசத்தல் அப்டேட்களை வெளியிட்டுள்ள எட்ஜ் பிரவுசரில், நேற்று அறிமுகமானவை குறித்த தகவல் இத்துடன் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

Edge Browser Update (Photo Credit: @Team LatestLY)

ஆகஸ்ட் 25, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் கணினி உட்பட மென்பொருள் சாதனங்களுக்கான ஓஎஸ் சேவையை வழங்கி வரும் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம், தனது எட்ஜ் (Edge Browser) இணையதளத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிசினஸ், தொழில் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட எட்ஜ் ப்ரோஷர், தொடர்ந்து பல புதுப்பிப்புகளையும் பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி எட்ஜை 177 மில்லியன் மக்கள் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், எட்ஜின் அறிமுகத்திற்கு முன்பு வரை இன்டர்நெட் எக்ஸ்பிரோரர், கூகுள் பிரௌசர் போன்றவை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் கூகுள் நிறுவனத்தின் ப்ரௌசர் பயனர்களின் வசதிக்கேற்ப அறிமுகம் செய்யப்பட்டதால், அதன் தேடலில் இருந்த எளிமை, கிடைத்த மிகப்பெரிய அளவிலான தகவல்கள், அணுகும் முறை, இன்டர்நெட் பயன்பாடு போன்ற விஷயங்களால் இன்று வரை வரவேற்கப்படுகிறது.

அப்டேட் வழங்கிய மைக்ரோசாப்ட் எட்ஜ்:

அதேநேரத்தில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ், தற்போது கூகுளுக்கு ஈடு செய்யும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டு வருகிறது. உலகிலேயே 3 வது மிகப்பெரிய ப்ரௌசராக மக்களால் பயன்படுத்தப்படு எட்ஜ், தனது சார்பில் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. National Space Day 2024: இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்.. வரலாறு என்ன தெரியுமா?! 

புதிய தகவல்கள்:

அதன்படி, இனி மைக்ரோசாப்ட் எட்ஜ் பயன்படுத்துவோர் தங்களின் தேடல் உட்பட செயல்பாடுகளை சிறப்பிக்க ஏற்கனவே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறனும் (Artificial Intelligence) வழங்கப்பட்டது. தற்போது பயனர்கள் தேடல் (Search) பிரிவில் வானிலை (Weather), பெருக்கல்-கூட்டல் கணக்கு (Calculations), அளவீடுகள், வெளிநாட்டு பணமதிப்பு தேடல் (Foreign Money Price), விரைவான தேடல் (Quck Info), க்ரிப்டோ கரன்சியின் (Crypto Currency Price) மதிப்பு போன்றவற்றை தேடினாலே, அதனை என்டர் (Enter) முறையில் தேடாமலேயே பதில் கிடைக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி எழுதுவோர், தங்களின் விருப்பத்திற்கேற்ப எழுத்துக்களை பத்தி வாரியாக தேர்வு செய்து எழுதும் புதிய முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு விஷயத்திற்காக மின்னஞ்சல் அனுப்புவோர் முதல் பலருக்கும் உதவி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் எப்போதும் பயன்படுத்தும் டேப்ஸ்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் வகையிலும், அதனை தலைப்புகளின் கீழ் தொகுப்பாக்கிக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னதாக வெவ்வேறு தளங்களில் உள்ள பொருட்களின் விலை நிலவரம் குறித்து இரண்டையும் பிரிந்து அறியும் வகையில் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வசதிகள் கூகுள் பிரவுசரில் இருக்கிறது என்றாலும், எட்ஜ் பயன்படுத்துவோரின் வசதிக்காக அவை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக பல்வேறு புதுமைகளும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகிறது. இது எட்ஜ் பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.