ஆகஸ்ட் 23, சென்னை (Technology News): சந்திராயன்-3 என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்ட மூன்றாவது சந்திர ஆய்வுத் திட்டமாகும். 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், 2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது இந்தியாவை நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமைக்கு உயர்த்தியது. மேலும் இந்தியாவில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக (National Space Day) அறிவிக்கப்பட்டது.
சந்திராயன் 3: சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஜூலை 14ஆம் தேதி அன்று இஸ்ரோ விண்ணிற்கு ஏவியது. சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. சந்திரயான் -3 இல் அனுப்பிவைக்கப்படும் லேண்டரும் ரோவரும் நிறைய பரிசோதனைகளைச் செய்து சில குறிப்பிட்ட முக்கிய தரவுகளைப் பெறவேண்டும். Madras Day 2024: வந்தாரை வாழவைக்கும் சென்னை நகரின் வயது 385.. நகரம் உருவானது எப்படி??.. வரலாறு தெரியுமா?.! வாழ்த்துச்செய்தி இதோ.!
அவற்றுள், நிலவின் மேற்பரப்பு ஆராய்ச்சி, நிலவின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களைப் பற்றிய ஆராய்ச்சி, அங்கு தனிமங்கள் உள்ளதா எனத் தேடுதல், நிலவின் வளிமண்டலத்தைக் கண்காணிப்பது, நீர் மற்றும் பனி வடிவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது, நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்புவது, மேற்பரப்பின் வேதிப்பகுப்பாய்வு மற்றும் அவற்றில் உள்ள தனிமங்களின் அடிப்படையில் நிலா எப்படி உருவானது என்ற ரகசியத்தைக் கண்டறிய முயற்சிப்பது, அதன் அடிப்படையில் 3D வரைபடங்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை இவை மேற்கொள்கிறது. இது போன்ற நிலவரங்களை அறிந்து, எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்றும் ஆய்வு செய்ய உள்ளனர்.