Wipro Ends Hybrid: வாரத்தின் 3 நாட்களாவது அலுவலகத்தில் வேலை; அழைப்புடன், எச்சரிக்கையும் சேர்த்து விடுத்த விப்ரோ.!

2.4 இலட்சம் ஊழியர்களுடன், பெங்களூரில் தலைமையிடத்தை கொண்டு செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனம், தனது பணியாளர்களை வாரத்தில் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.

Wipro Logo (Photo Credit: www.wipro.com)

நவம்பர் 07, புதுடெல்லி (Technology News): கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மக்களை கடுமையாக வாட்டி வதைத்த கொரோனா வைரஸ் (Corona Outbreak) பரவல் காரணமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக விப்ரோவும் (Wipro), தனது நிறுவனத்தின் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தனது பணியாளர்களை பணியிடத்திற்கு திரும்ப ஆணையிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைமை, வாரத்தின் மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. Maheswar Mohanty: ஒடிஷா முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் மகேஸ்வர் காலமானார்; உடல்நலக்குறைவால் சோகம்.! முதல்வர் இரங்கல்.! 

மேலும், புதிய பணிக்கொள்கையை கடைபிடிக்க தவறும் பட்சத்தில், ஜனவரி 7, 2024 முதல் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் தங்களின் பணியிடத்திற்கு திரும்ப மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் அந்நிறுவனத்தில் 2.40 இலட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.

அலுவலகத்தில் வந்து பணியாளர்கள் வேலை பார்ப்பதன் வாயிலாக, இடைப்பட்ட காலங்களில் தடைபட்டுக்கிடந்த பல முன்னேற்றங்கள் கைகூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

சமீபத்தில் Infosys, Tata Consultancy Services ஆகிய நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை மீண்டும் பணியிடத்திற்கு அழைத்திருந்த நிலையில், தற்போது