நவம்பர் 07, புவனேஸ்வர் (Odisha News): பிஜு ஜனதா தல் கட்சியின் மூத்த நிர்வாகியும், ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருமான மகேஸ்வர் மெஹந்தி (Maheswar Mohanty), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

67 வயதாகும் மெஹந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Mizoram & Chhattisgarh Assembly Poll: தொடங்கியது மிசோரம் & சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்குப்பதிவு; ஐஇடி குண்டு வெடித்து ஜவான் படுகாயம்.! 

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவை அறிந்த அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் பூரி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட மெஹந்தி, 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை சபாநாயகராகவும் பணியாற்றி இருக்கிறார். முந்தைய நவீனின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார்.

இறுதியாக கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநிலத்தில் பிஜு ஜனதா தல் வெற்றியடைந்து நவீன் பட்நாயக் ஆட்சி அமைத்தாலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயந்த் சரங்கிடம் தோல்வி கண்டார்.