Nabati Cashback: 10 ரூபாய் கேஷ்பேக் கொடுப்பதாக, தனிநபர்களின் தகவலை சேகரிக்கும் நபாட்டி; விபரம் இதோ.!

செல்போன் செயலிகளில் நாம் கொடுக்கும் ஒவ்வொரு அனுமதியும், நமது தனிப்பட்ட தகவலை, நமது மறுஅனுமதியின்றி பகிர வழிவகை செய்யும்.

Visual from Video (Photo Credit: Top Informer Facebook)

நவம்பர் 10, சென்னை (Technology News): தனிநபர்களின் தகவல்கள் என்பது தொழில்நுட்ப உலகில் எங்கும் பகிரப்பட்டு வருகிறது. நாம் தெரிந்தும் - தெரியாமலும் நமது தகவலை இன்னொருவருக்கு பகிர அனுமதி வழங்குகிறோம். தினமும் நாம் உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போனில், செயலிகளை பதிவிறக்கம் செய்ததும் அவை கேட்கும் கேள்விகளை வாசித்துப்பார்க்க கூட விருப்பம் இன்றி, அனைத்திற்கும் அனுமதி வழங்கிவிடுகிறோம்.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் நமது தகவலை பகிர விரும்பினாலும், அடுத்தமுறை எவ்வித அனுமதியும் இன்றி அனைத்தையும் வாரி வழங்கும். தகவல் திருட்டு தொடர்பான மிகப்பெரிய பிரச்சனைக்கு இவை வழிவகை செய்யும். World Heat Wave: காலநிலை மாற்றத்தால் கடந்த ஓராண்டில், உலகளவில் வெப்பநிலை கடும் உயர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! 

இந்த நிலையில், நபார்டி நிறுவனம் தனது பயனர்களுக்கு கேஷ் பேக் வழங்குவதாக கூறி, தனிநபரின் பெயர், இருப்பிடம், மொபைல் நம்பர் போன்றவற்றை பெறுகிறது. அதன் குறிப்புப்பெட்டகத்தில், நான் எனது தனிப்பட்ட தகவலை பகிர அனுமதி வழங்குகிறேன் என்பதை இறுதியாக தேர்வு செய்தால் மட்டும் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற அமைப்புகள் கட்டாயம் தகவலை நமக்கே தெரியாமல் மூன்றாவது நபருக்கு பகிர வழிவகை செய்யும் என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கூற்று. இவ்வாறான செயல்களை தவிர்க்க நாம் பெயர் உட்பட அனைத்தையும் தவறாக கொடுத்தாலும், நமது செல்போன் நம்பரே அவர்களுக்கு போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஓடிபி வந்ததும் தான் பணம் அனுப்பப்படும்.

தொழில்நுட்ப உலகில் மோசடிகள் பலவிதமாக இருந்தாலும், நல்ல வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் முயற்சிகள் எப்போதும் வரவேற்கப்படுபவை. ஆனால், வளர்ச்சிப்பணிகளை தடுக்க நினைக்கும் எதிராளிகளுக்கு சிறுவாய்ப்பு கிடைத்தாலும் அதனையும் தவிடுபிடியாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பொருளை வாங்குவதும், அதில் உள்ள அமைப்பை பயன்படுத்துவதும் தனிநபரின் உரிமை எனினும், சுதாரிப்புடன் செயல்படுவது நல்லது. ஏனெனில் இன்றைய காலங்களில் எங்கும் நமது தகவல் சேகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து Top Informer என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நபாட்டி நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.10 பணம் வழங்குவதாக கூறி, யுபிஐ வழியே பணம் அனுப்புவதாக தெரிவித்து தனிநபரின் விபரங்களை கேட்பதும், அதனை பகிர்வதற்கான அனுமதியை பெறுவதும் உறுதியாகியுள்ளது.