நவம்பர் 09, வாஷிங்க்டன் டிசி (World News): உலகளவில் பெட்ரோல், நிலக்கரி, இயற்கை எரிவாயு, கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை உபயோகம், உலகை வெப்பமயமாக்கி வருகிறது. இதனைத்தவிர்த்து புதைபடிவ எரிபொருள், மனித செயல்பாடுகள் சர்வதேச அளவிலான வெப்பமயத்தால் விளைவை நவம்பர் 2022 முதல் அக்.2023 வரை கடுமையான அளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் உலகளவில் உள்ள 90% மக்கள் 10 நாட்கள் கடுமையான வெப்பத்தை தாங்கவேண்டிய சூழ்நிலை அதிகரித்தது. இவை காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும். நாம் இன்றளவும் இயற்கை எரிவாயு, எண்ணெய் போன்றவற்றை எரித்து வருகிறோம். நடப்பு ஆண்டுகளின் தரவுகளின்படி, அவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலநிலையை விட, சராசரியாக உலக வெப்பநிலை என்பது 1.3 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்துள்ளது. பாரிஸ் ஒப்பந்த வரம்புக்கு மிக அருகில் இவை வந்துவிட்டது. உலகளவில் நான்கில் ஒருவர் ஆபத்தான வெப்ப அலையால் பாதிக்கப்படுகிறார். Eye Pressure: கண்கள் பிரச்சனையை எளிதாக என்ன வேண்டாம் மக்களே.. பார்வையே பறிபோகும் அபாயம்.! விபரம் இதோ.!
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக வெப்பம் அபாயகரமான மழைபொழிவைத்தூண்டி, வெப்பமான வளிமண்டத்தை நீராவியால் நிரப்பி ஆப்ரிக்காவில் மோசமான புயலை உருவாக்கியது. இதனால் கிரீஸ், பல்கெரியா, துருக்கி நாடுகள் பாதிப்படைந்தன.
இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் மக்கள் (மக்கள் தொகையின்படி 86% மக்கள்), 30 நாட்களுக்கு கூடுதலான வெப்பநிலையை எதிர்கொண்டனர். பிரேசில் அமேசான் காடுகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் தீவிர வானிலை, காட்டுத்தீ 383 பேரின் உயிரை காவுவாங்கியது. கனடாவில் காட்டுத்தீ ஏற்பட்டது. வடஅமெரிக்கா புகைமண்டலமானது. ஜமைக்காவில் 12 மாதங்களில் மட்டும் நான்கு முறை அதிவெப்பநிலை ஏற்பட்டுள்ளது.