IPL Auction 2025 Live

Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!

பாஸ்ட்டேக் உபயோகம் செய்பவர்கள் பேடிஎம் வாயிலாக பணம் செலுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு வழங்கிட அங்கீகாரத்தை என்.எச்.ஏ.ஐ நீக்கி இருக்கிறது.

NHAI | Paytm UPI (Photo Credit: Wikipedia / YouTube)

பிப்ரவரி 19, புதுடெல்லி (New Delhi): இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில், அச்சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கச்சாவடிகள் வாயிலாக வரிகள் வசூலிக்கப்படும். மின்னணு முறையில் பணம் வசூலிக்க FASTag முறை அரசால் கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது, பாஸ்ட்டேக் வாயிலாக கணக்கில் பணம் செலுத்தி வைத்துக்கொண்டு அதனை வைத்து எளிதில் கடந்து செல்லலாம்.

பேடிஎம்-க்கு அடுத்த ஆப்பு: தேசிய நெடுஞ்சாலை மையம் சார்பில் பேடிம் (Paytm) உட்பட பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஆர்.பி.ஐ விதிமுறைகளை மீறிய சர்ச்சையில் சிக்கி, அதன் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறது. அந்நிறுவனம் சார்பில் நிறுவனத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அடுத்த அதிர்ச்சியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. Admit Card with Sunny Leone Photo: சன்னி லியோன் புகைப்படத்துடன் காவலர் தேர்வுக்கான நுழைவுசீட்டு; இளைஞருக்கு அதிர்ச்சிகொடுத்த அலட்சியப்பணி.! 

பாஸ்ட்டேக்கில் பணம் செலுத்த இயலாது: அதன்படி, சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் முறையில் பேடிஎம் கணக்குகளை பயன்படுத்த என்.எச்.ஏ.ஐ தடை விதித்துள்ளது. என்.எச்.ஏ.ஐ சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்ட்டேக் சேவை வங்கிகளில் இருந்து பேடிஎம் செயலியை நீக்கி இருக்கிறது. இதனால் பிப்ரவரி மாதம் 29ம் தேதிக்கு பின்னர் பேடிஎம் கணக்குள்ள வாலட்களை பயன்படுத்தி பாஸ்ட்டேக்கில் பணம் செலுத்த இயலாது. பேடிஎம் கணக்கு வைத்துள்ளவர்கள், பிற ஆன்லைன் செயலிக்கு மாறக்கூறி கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உங்களின் பேடிஎம் செயலியில் இருக்கும் பாஸ்ட்டேக்கை செயலிழக்க செய்யும் முறைகள்:

✅ பேடிஎம் கணக்கை திறந்து, மேல் இடது மூலையில் இருக்கும் விபர குறியீட்டை (Information & More) அழுத்த வேண்டும்.

✅ பின் உதவி & ஆதரவு (Help & Support) பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வங்கி சேவைகள் (Banking Services & Payments) பக்கத்தில் இருக்கும் பாஸ்ட்டேக்கை தேர்வு செய்ய வேண்டும்.

✅ இதன்பின் செயலில் கோரிக்கைக்கு வேண்டுகோள் வைத்திட வேண்டும்.

✅ பாஸ்டேக்கில் இருக்கும் பேடிஎம் பக்கத்திற்கு சென்று உள்நுழைந்து, பாஸ்ட் டேக் நம்பரை சரிபார்த்து நமது பேடிஎம் கணக்கை மூடலாம்.