டிசம்பர் 23, சிதம்பரம் (Cuddalore News): சென்னை - நாகப்பட்டினம் (Chennai Nagapattinam Highway) நான்குவழிச்சாலை பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று, இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. குறிப்பாக கடலூர் - நாகப்பட்டினம் (Cuddalore Nagapattinam Highway) சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு நிலையில், சிதம்பரம் (Chidambaram) பகுதியில் உள்ள கொத்தட்டை (Kothattai Toll Plaza) கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் நிறைவுபெறாமல், சில பணி எஞ்சி இருக்கிறது. இதனிடையே, சுங்கச்சாவடியில் 23 டிச 2024 முதல் வசூல் செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!
இன்று முதல் கட்டணம் வசூல்:
அதன்படி, இன்று காலை 8 மணிமுதல் சுங்கச்சாவடி செயல்பட தொடங்கிஉள்ளது. சுங்கச்சாவடியில் கார் ஒருமுறை செல்ல ரூ.125 கட்டணமாகவும், பேருந்து ஒருமுறை செல்ல ரூ.425 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு 50 முறை பயணம் செய்ய ரூ.14,090 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிராக தனியார் பேருந்து மற்றும் லாரி ஓட்டுனர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். சுங்கச்சாவடி பணிகள் நிறைவு பெறவில்லை, கட்டணம் அதிகம் உள்ளது என்பதால் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் குவிப்பு:
கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சுங்கச்சாவடியை நோக்கி தனியார் பேருந்து உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர். இதனால் சிதம்பரம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் இன்று ஒருநாள் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், இவ்வழித்தடத்தில் இன்று ஒருநாள் பேருந்துகளை இயக்கமாட்டோம் என அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.
இதனால் கடலூர் - சிதம்பரம் மார்க்கத்தில் இயங்கும் 39 பேருந்துகள் இயக்கப்படவவில்லை. சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காரணத்தால், 200 க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.