Dindigul Vathalagundu Toll Gate Smashed (Photo Credit: @BillaAshwin X)

மார்ச் 12, வத்தலகுண்டு (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு (Batlagundu), லட்சுமிபுரம், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவுபெறாமல் இருக்கும் நிலையில், வத்தலக்குண்டு சுங்கச்சாவடி (Vathalagund) இன்று காலை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, சுங்கச்சாவடி செயல்பாட்டில் வந்தது. சாலை பணிகளே நிறைவுபெறாத நிலையில், சுங்கச்சாவடி செயல்படக்கூடாது என உள்ளூர் மக்கள் முன்னதாகவே கண்டன குரல் எழுப்பி இருந்தனர். Rowdy Murdered: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. ரௌடி வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டிப்படுகொலை..! 

முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது:

இந்நிலையில், இன்று காலை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடந்த சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில், ஒருகட்டத்தில் சுங்கச்சாவடி மொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள் அனைத்து சம்பவமும் நடைபெற்று முடிந்தது. சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விடீயோவின் அடிப்படையில், சுங்கச்சாவடியை தாக்கியவர்கள் விபரங்களை அதிகாரிகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட காணொளி: