NKorea Missile Launch: அமெரிக்காவுக்கு அதிர்ச்சித்தந்த வடகொரியா; முக்கியப்புள்ளி பயணத்தின்போதே ஏவுகணை சோதனை நடத்தி சர்ச்சை.!
உலக நாடுகளில் அணுஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வடகொரியா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் தென்கொரிய பயணத்தின்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு இருக்கிறது.
மார்ச் 18, பியோங்யாங் (Technology News): அணுஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக, வடகொரியா (North Korea) இன்று உலக நாடுகளில் தனித்து விடப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியது. அதிபர் கிம் ஜாங் (Kim Jong Un) உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியா அரசு, தொடர்ந்து கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது. இதனால் உலகளவில் என்றேனும் அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கலாம் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. சீனா மற்றும் ரஷியா (Russia) போன்ற நாடுகள் வடகொரியாவுக்கு ஆதரவான சில செயல்களையும் முன்னெடுத்து இருக்கிறது. Vladimir Putin Victory on President Election: பேராதரவுடன் ரஷியாவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் விளாடிமிர் புதின்; இனி எல்லாம் அதிரடிதான்.!
அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிளிங்க்டன்: அவ்வப்போது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் (Ballistic Missile Launch) பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை சோதனை செய்வது வழக்கம். இவை ஜப்பான் கடற்பரப்பின் மீதும் விழும். இவ்வாறான அச்சுறுத்தலை சந்திக்கும்போதெல்லாம் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாக இருக்கும் ஜப்பான் மற்றும் தென்கொரியா தனது குற்றச்சாட்டையும் முன்வைக்கும். தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்க்டன் (US State Secretary Antony Blinken) அரசுமுறை பயணமாக தென்கொரியா வந்துள்ளார். தொடர்ந்து அவர் ஆசிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். Activated Indian Sim Racket: மோசடி செயலுக்காக இந்தியாவில் இருந்து வியட்னாம் பறக்கும் சிம்கள்.. திரைப்பட பாணியில் மக்களை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
வடகொரியா ஏவுகணை சோதனை: இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் தென்கொரிய பயணத்தின்போதே, வடகொரியா தனது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது உலகளவில் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளும் உறுதி செய்திருக்கின்றன. உள்ளூர் நேரப்படி காலை 07:44 மணிமுதல் 08:22 க்குள் வடகொரியாவின் தலைநகரில் இருந்து விண்ணில் சீரிய ஏவுகணை, 300 கி.மீ தூரம் பயணித்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)