Sim - Cyber Crime (Photo Credit: Pixabay)

மார்ச் 17, புதுடெல்லி (New Delhi): நமது சுய விபரத்தை பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை நமக்கு அளிக்க முன்வருகிறார்கள் என்றால் அதனால் அவர்களுக்கு ஆதாயம் இருப்பதை புரிந்துகொண்டு மக்கள் செயல்பட வேண்டும். வறுமையில் தவிப்பர்களை கிள்ளுக்கீரை போல பயன்படுத்த நினைக்கும் கூட்டத்திடம் இருந்து நாம் சுதாரிப்புடன் தப்பிக்கவில்லை என்றால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

கூரியரில் அனுப்பி வைக்கப்பட்ட சிம்கார்டுகள் (Sim Cards): இந்தியாவில் வசித்து வரும் நபர்களின் பெயரில் சிம்கார்டுகளை வாங்கி, அதனை குறைந்த தொகைக்கு கூரியர் முறையில் வியட்னாமுக்கு அனுப்பி வைத்து, பின் அங்குள்ள மக்களிடம் அதிக தொகைக்கு விற்பனை செய்யும் கும்பல் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடகத்தின் இலாபத்திற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

500 சிம்கார்டுகள் பறிமுதல்: டெல்லி விமான நிலையத்தில் உள்ள சரக்கு வழித்தட பிரிவில், சந்தேகத்திற்கு இடமான வகையில் வியட்னாமுக்கு அனுப்பி வைக்கப்பட தயராக இருந்த சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 500 சிம்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், டெல்லி விமான நிலைய (Delhi IGI Airport) அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடந்தது. Ariyalur Shocker: குடிக்க பணம்கேட்டு தொந்தரவு; மகனின் மது வெறியால், தாய்-தந்தை மனமுடைந்து தற்கொலை.! 

Cyber Crime (Photo Credit: Pixabay)

மக்களை ஏமாற்றி ரூ.200 கொடுத்து சிம் வாங்கியது அம்பலம்: விசாரணையில், சுமார் 60 சிம் கார்டுகள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மற்றும் லோஹா மண்டி பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இவர்களிடம் முகுல் குமார் என்பவர் வாயிலாக சிம் கார்டுகள் ரூ.200 கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்களாக இருந்தவர்களை தேர்வு செய்து ரூ.200 க்காக மோசடி செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து கைமாற்றிவிடப்பட்ட சிம்: பின் பெறப்பட்ட சிம் கார்டுகளை கன்னையா, ஆக்ராவை சேர்ந்த ஹேமந்த் ஆகியோருக்கு சிம் தலா ரூ.300 என முகுல் விற்பனை செய்துள்ளார். அவர் தலா ரூ.500 பணம் கொடுத்து சிம்களை பெற்றுள்ளார். இதன்பின்னரே அணில் குமார் என்பவரால் வியட்னாம் முகவரிக்கு சிம்கார்டு அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்ட, சிம் ஒன்றுக்கு ரூ.1300 கிரிப்டோ கரன்சி முறையில் ஏற்பட்டுள்ளது.

நால்வர் கும்பல் கைது: இவ்வாறாக பெறப்பட்ட சிம் கார்டுகள் வியட்னாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து நிதி மோசடிகள் அல்லது பிற விவகாரங்களுக்கு உபயோகம் செய்யப்படும். டெலகிராம் கணக்கு வாயிலாக மோசடிக்கான விதை செயல்படுத்தப்பட்டுள்ளது. கைதாகிய அணில் குமார் நிர்வகித்து வந்த 19 வங்கிக்கணக்குகளும், அது சார்ந்த விபரங்களும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டன. மேலும், முகுல் குமார் (வயது 22), ஹேமந்த் (வயது 26), கன்னையா குப்தா (வந்து 29), அணில் குமார் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை தொடருகிறது.