Open AI CEO: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யார்?.. எம்மட் ஷேர் பொறுப்பேற்க வாய்ப்பு?..!
உலகளவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓபன் ஏஐ நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சனையை உலகமே உற்றுநோக்கி வருகிறது.
நவம்பர் 20, கலிபோர்னியா (Technology News): கடந்த நவம்பர் 17ம் தேதி எலான் மஸ்க் (Elon Musk) நிர்வகித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான, ஓபன் ஏஐ (Open AI) அமைப்பின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman), அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டார்.
அவர் தகவல் தொடர்பு விஷயங்களில் வெளிப்படையாக இல்லை என்ற காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று முதல் ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சாம் ஆல்ட்மேன், அப்பணியில் மீண்டும் தொடருவார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தன. 2 Killed Gun Fire in Bihar: காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது சரமாரி துப்பாக்கிசூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி., 4 பேர் படுகாயம்.!
இந்நிலையில், Inside Paper மற்றும் The Spectator Index செய்தி நிறுவனங்களின் கூற்றுப்படி, சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக தொடர வாய்ப்புகள் குறைவு என்றும், எம்மெட் ஷேர் (Emmett Shear) ஓபன் ஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்மட் ஷேர் முன்னதாக Justin.tv அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆவார். தற்போது Twitch அமைப்பின் இணை நிறுவனராகவும் இருக்கிறார்.