Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.!
1 TB ஸ்டோரேஜ், 16 GB அல்லது 32 GB ரேம், Nvidia GeForce RTX 4050 கிராபிக்ஸ் கார்ட் உட்பட பல அம்சங்களுடன் இந்தியாவில் சாம்சங் லேப்டாப் கேலக்சி புக் 4 அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி செய்தியை படிக்கவும்.
ஜூலை 03, சென்னை (Technology News): உலகளவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமான நிறுவனமாக இருந்து வரும் சாம்சங், இந்தியாவில் தனது அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் கூடிய கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்பை (Samsung Galaxy Book 4 Ultra) அறிமுகம் செய்துள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மனிதர்களின் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய உதவிய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிசக்தி திறன் கொண்ட ஜிபியு, என்பியு, சிபியு போன்றவையும் அதன் வேகத்தை அதிகரிக்க உதவி செய்கின்றன. மேலும், பார்ப்பதற்கு அட்டகாசமான டிஸ்பிளே அமைப்பு, டிசைன், ஆடியோ வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் 11 இயங்குதளம் கொண்டு செயல்படும் கேலக்சி புக் அல்ட்ரா, சாம்சங்கின் சொந்த க்னோஸ் பாதுகாப்பு அமைப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் வெளிர் சாம்பல் (Grey) நிறத்தில் அறிமுகமான லேப்டாப், ஏய் தொழில்நுட்பத்துடன் பல பணிகளை எந்த விதமான ஹேங்கிங் பிரச்சனை இல்லாமல் செயல்படும் அளவு அதன் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் போட்டோ, வீடியோ, கேமிங் போன்ற பல பணிகளுக்கு தாராளமாக இதனை பயன்படுத்தலாம். இன்டெல் கோர் அல்ட்ரா 7 ப்ராசசர், இன்டெல் கோர் அல்ட்ரா 9 185H ஆகிய ப்ராசசர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Team India Arrives Home: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!
சிறப்பம்சங்கள் இதோ:
மேலும், 1 TB ஸ்டோரேஜ், 16 GB அல்லது 32 GB ரேம், Nvidia GeForce RTX 4050 கிராபிக்ஸ் கார்ட் அல்லது RTX 4070 கிராபிக்ஸ் கார்ட் வசதியும் பொருத்தப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் புகைப்படங்களை அதன் உதவியுடன் எளிதில் எடிட்டிங் செய்ய இயலும். இதனால் அதிக திறனுடன் அறிமுகமாகும் சேம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா, வீடியோ பதிவின்போது அதிக பாஸ் சத்தம் மற்றும் வெளிப்புற சத்தத்தை கட்டுப்படுத்தி துல்லிய ஆடியோவை வழங்கும். பேச்சுக்கள் மூலமாக தகவலை பரிமாறும் போதும் இவை செயல்பாட்டில் இருக்கும். இதனால் நாம் பேசும் விஷயம் மற்றொரு பயனருக்கு துல்லியமாக கேட்கும்.
விலை நிலவரம் என்ன?
சாம்சங் லேப்டாப்களில் கேலக்சி புக் 4 அல்ட்ராவில் டைனமிக் AMOLED 2X 16 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, 3K ரிசொல்யுஷன், 120 Hz புதுப்பிப்பு திறனும் வழங்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே செயல்திறன் காரணமாக வீடியோ காணும் அனுபவமும் மேம்படும். வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பயன்படுத்தும் வகையில், எதிர்ப்பு பிரதிபலிப்பு திரை (Anti Reflective Screen) தொழில்நுட்பம் உள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ராவில், இன்டெர்ல் கோர் அல்ட்ரா 7 ப்ராசசர் 155H & நிவிடியா ஜீபோர்ஸ் RTX 4050 ஜிபியு மாடல் ரூ.2,33,999/- முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இன்டெல் கோர் அல்ட்ரா 9 ப்ராசசர் 185H & நிவிடியா ஜிபோர்ஸ் RTX 4070 ஜிபியு ரூ.2,81,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)