Electric Kettle Maintenance: மின்சார கிட்டில் நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க.!

மின்சார கிட்டிலை சரியான முறையில் பாராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியும்.

Kettle (Photo Credit: Pixabay)

நவம்பர் 05, கலிபோர்னியா (Technology News): பேச்சுலர்ஸ்க்கும், ஹாஸ்டலில் இருப்பவர்களுக்கும் ஃபேவ்ரட் கிச்சன் கேஜட் என்றால் எலெக்ரிக் கிட்டில் (Electric ) தான். ஏனெனில் இதில் தான் அடுப்புத் தேவை இல்லாமல் சுடு தண்ணீர், டீ போடுவது முதல் முட்டை, கிழங்குகள் வரை வேக வைக்க முடியும், அதோடு பட்ஜெட்டிற்குள்ளும் இருக்கும். சமீப காலமாக பலரும் இதை திருமணங்களில் கிஃப்டாக வழங்குகின்றனர். மின்சார கிட்டிலை சரியான முறையில் பாராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியும்.

கிட்டிலை சுத்தம் செய்ய:

மிருதுவான துணியை தண்ணீரில் நனைத்து வாரம் ஒரு முறை கிட்டிலின் மேல் பகுதியைத் துடைக்க வேண்டும். தினமும் சுடு தண்ணீர் போடுவதற்காக மட்டும் மின்சார கிட்டில்களைப் பயன்படுத்தினால் கிட்டிலின் உட்புறத்திலும் வாரம் இரு முறை கழுவ வேண்டும். WhatsApp: அடேங்கப்பா.. வாட்சப்பில் புதிய அப்டேட்.. இதை நீங்க கவனிச்சீங்களா?.. விபரம் உள்ளே.!

கிட்டிலை கழுவ, தண்ணீருடன் வெள்ளை வினிகரை 1:1 என்ற விதத்தில் கலந்து கொள்ள வேண்டும். வினிகருக்கு பதில் எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம். இதை கிட்டிலில் ஊற்றி, 30 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின் மென்மையான ஸ்க்ரப் கொண்டு கிட்டிலின் உட்புறத்தை தேய்த்து கழுவ வேண்டும்.

சிறிது கவனம்: