WhatsApp Update (Photo Credit:: WhatsApp / Wikipedia Commons)

நவம்பர் 04, கலிபோர்னியா (Technology News): இணையவழியில் உடனடி செய்தி பகிர்வுக்கு உலகளவில் பயன்படுத்தப்படும் வாட்சப் (WhatsApp), கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2009ல் வெளியானது. இன்றளவில் சர்வதேச அளவில் அதிக பயனாளர்களை கொண்ட செயலியாக கவனிக்கப்படும் வாட்சப், பல புதுப்பிப்புகளை அடைந்துவிட்டது. வாட்சப் வாயிலாக எழுத்து, வாயிஸ், போட்டோ, டாக்குமெண்ட் தகவலை பகிர்ந்து வருகிறோம். Warning For Samsung Users: சாம்சங் பயனர்களே அலர்ட்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

புதிய அப்டேட்:

உலகம் முழுவதும் வாட்சப் வழியாக இன்றளவில் பணம் அனுப்பும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகத்தில் அதிகரித்து வரும் போட்டியை ஈடு செய்ய, வாட்சப் பல புதிய அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில், வாட்சப்பில் அப்டேட் ஒன்று வெளியகியுள்ளது. இதுவரை வாட்ஸப்பை ஓபன் செய்ததும், அதில் அனைத்தும் (All) எனப்படும் அமைப்பு இருக்கும். WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஆன்லைன் மோசடிக்கு சாத்தியமில்லை.. வருகிறது புதிய அப்டேட்.!

தனித்தனியாக பிரியுங்கள்:

தற்போது வழங்கப்பட்டுள்ள அப்டேட் படி, நமது சேட்டிங்கை கல்வி, வேலை, நண்பர்கள், குடும்பம், விருப்பம், பொதுப்போக்கு என தனித்தனிப்பட்டியலுக்குள் வைக்க உதவும். இதன் வாயிலாக நமது சேட்டிங் தனித்தனியாக இருக்கும். அதனை தேவை என்றால் நாம் முன்னதாகவே சேமித்து வைத்த பக்கத்திற்குள் சென்று குறித்த சேட்டிங்கை பார்க்கலாம். நாம் தனிப்பட்ட முறையில் நமக்கென பிரிவு ஒன்றையும் உருவாக்கி, அதில் நமது சேட்டிங்கை பிரித்து வைக்கலாம்.