BSNL's 'Direct to Device' Service: இனி சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு.!

பிஎஸ்என்எல் நிறுவனம் டைரக்ட் டூ டிவைஸ் என்ற தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Bsnl 4g (Photo Credit: @drsangrampatil X)

நவம்பர் 08, டெல்லி (Technology News): பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம், பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் (BSNL) ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு அதில் வெற்றி கண்டுள்ளது. டைரக்ட் டூ டிவைஸ் (Direct-to-Device - D2D) என்ற தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. Pawn Jewelry: தங்க விலை உயரும் நேரத்தில் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கலாமா? முழுவிபரம் உள்ளே.!

டைரக்ட் டூ டிவைஸ்: இந்த தொழில்நுட்பம் அறிமுகமானால் வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தடையின்றி கால்களை பேச முடியும். அதாவது D2D எனது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக சாட்டிலைட் நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும்.