நவம்பர் 07, டெல்லி (Technology News): தங்கம் வாங்குவதே பலரின் எதிர்கால சேமிப்பிற்கான முதலீடாக இருக்கிறது. அவசர காலங்களிலும் நிதிப்பற்றாகுறையின் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே இந்த தங்கம் தான். ஆனால் தற்போது தங்கத்தின் மதிப்பு சாமானிய மக்களால் வாங்க முடியாத இடத்தில் உள்ளது. இந்நிலையில் வேலையிழப்பு பலருக்கும் நிகழ்ந்து வருகிறது. நிதிப்பற்றாக் குறையால் தங்கத்தை வைத்து கடன் வாங்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த தங்க விலை ஏற்றத்தின் போது நகைகளை பைனான்ஸில் வைத்து கடன் பெறலாமா (Pawn Jewelry) விவரங்கள் இதோ.. Pan Card New Rule: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.!
அமேரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சந்தையில் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகிய நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதால் பல முதலீட்டாளர் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கினர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை 60,000 தொட்டது. இவ்வாறு தங்கம் உச்சத்தை தொடும் வேளையில் நகைகளை வைத்து தரும் கடன்களின் எண்ணிக்கையும், அளவும் அதிகரிக்கும். சாதாரண காலகட்டத்தில் நகைகளுக்கு வழங்கும் தொகையை விட இது போன்ற நேரங்களில் தங்கத்திற்கு கூடுதலான தொகை கடனாக கிடைக்கும். நகை வைத்து கடன் வாங்க நினைப்பவர்கள் அன்றைக்கு தங்கத்திற்குரிய விலையை மதிப்பிட்டு அடகு வைத்து வாங்கலாம். நிறுவனங்கள் கொடுக்கும் தொகைக்கு வட்டி குறைவாக இருக்கிறது என்று பார்த்து வாங்க வேண்டும். அத்துடன் நகைகடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இது போன்ற நேரத்தில் தங்கம் அதிகரிப்பதால் சந்தையில் அவர்களின் ரிஸ்கும் குறையும்.