IPL Auction 2025 Live

Diamonds In Mercury: என்னது இவ்வளவு வைரமா! கிரகம் முழுவதும் கொட்டு கிடக்கும் வைரம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

ஒரு கிரகத்தில் பல மில்லியன் டன் கணக்கில் வைரம் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Planet (Photo Credit: Pixabay)

ஜூலை 26, புதுடெல்லி (New Delhi): விண்வெளியில் சூரியன் பூமியைத் தாண்டி பல சூரிய குடும்பங்களும் பல லட்ச கிரகங்களும் இருக்கின்றன. ஆனால் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் உயிர் வாழ தேவையான அத்தனையும் இருக்கிறது. இருப்பினும் பூமியைப் போன்று வேறு கிரகங்கள் இருக்கிறதா? வேறு கிரகங்களில் மனிதர்களால் வாழ முடியுமா? வேறு கிரகங்களிலும் மனிதர்கள் யாரும் இருக்கிறார்களா? என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வைர கிரகம்: அப்படி ஆய்வு செய்யும் பொழுது விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பத்தில் ஏழாவது மற்றும் எட்டாவது கிரகமாக இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரேகங்களில் வைர (Diamonds) மழை பொழிவதை கண்டறிந்தனர். இந்நிலையில் சூரிய குடும்பத்தில் முதலாவதாக இருக்கும் புதன் கிரகத்தில் (Mercury) பல மில்லியன் அளவில் வைரம் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன. How to Detect Hidden Cameras: ஓட்டலில் சீக்ரெட் கேமரா நினைத்து பயமா? கவலையே வேண்டாம்.. ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

அதாவது புதன் கிரகத்தின் மேல் தட்டு சுமார் 80 கிலோமீட்டர் ஆழமாக இருக்கலாம் என்றும் அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல்தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறி இருக்கலாம் என்று கூறுகின்றனர். வைர படிவத்தின் தனிமன் 15 கிலோமீட்டர் இருக்கும் என்றும் தனித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த வைரங்கள் பல கிலோமீட்டர் ஆழத்தில் இருப்பதனால் அதனை மனிதர்கள் எடுப்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர்.