Demat Account: பங்குச்சந்தையின் டிமேட் கணக்கு என்றால் என்ன? எப்படி ஓபன் செய்வது?!
சந்தைகள் புதிய புதிய சாதனை உச்சத்தை எட்டுவதால், புதிய முதலீட்டாளர்கள் டிமேட் கணக்குகளைத் திறப்பதில் ஆர்வம்காட்ட ஆரம்பித்துள்ளனர்.
செப்டம்பர் 20, புதுடெல்லி (Technology News): ஒரு வங்கியில் நாம் ஓபன் செய்யும் வைப்பு கணக்கு போன்று, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க விற்க தேவைப்படும் அக்கவுண்ட் தான் டிமேட் அக்கவுண்ட். முன்பு பங்குகளை வாங்க அந்த நிறுவனத்திலிருந்து ஷேர் சர்டிஃபிகெட் தருவார்கள். அது தொலைந்து அல்லது அழிந்து போகக் கூடியது. அதற்கு பதிலாகவே இந்த மின்னனு டிமேட் அக்கவுண்ட். வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள், மற்றும் வைப்புத்தொகை ஆகியவை மின்னணு வடிவில் உள்ளதோ அதே போன்று டிமேட்டிலும் பங்குகளை மின்னணு வடிவில் இருக்கும். SEBI-யின் வழிகாட்டுதல்களின் படி, Dematerialized வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒரு வடிவத்திலும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. Jio Complimentary Unlimited Plans: நேற்று யாருக்கெல்லாம் ஜியோ வொர்க் ஆகல? அடிச்சது ஜாக்பாட்..! இன்டர்நெட் இலவசம்..!
டிமேட் கணக்கு: இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கில் (IPO) பங்குகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், Demat கணக்கு வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதை வங்கிகள் அல்லது வங்கிகளுடன் சார்ந்த புரோக்கர் நிறுவனங்கள், வங்கி சாராத புரோக்கர் நிறுவனங்களில் இந்த அக்கவுண்டை திறக்க இயலும். வங்கிகளில் சேமிப்பு கணக்குடன் டிமேட் கணக்கு இருப்பதால் டிடான்ஸ்சாக்ஸன் செய்வது சற்று சுலபமானதாகும். வங்கி சாராத நிறுவனங்களில் ஓப்பன் செய்யதால் பணம் பரிவர்த்தனை மாற்றம் சற்று தாமதமாகும். மேலும் பங்குகளை வாங்கி விற்பதற்கான புரோக்கரேஜ் கட்டணம், மற்றும் சேவைக் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். இது நிறுவங்களைப் பொருத்து வேறுபடும்.
இந்த இரண்டு வழிகளிலுமே ஓப்பன் செய்யலாம். எது உங்களுக்கு சரியானதாக இருக்கும் என நன்கு யோசித்து முடிவு செய்யவும். இந்தியாவில் உள்ள அனைத்து Demat கணக்குகளையும், அரசின் கீழ் செயல்படும் NSDL & CDSL என்ற நிறுவனங்கள் கண்கானித்து வருகின்றன.