செப்டம்பர் 19, மும்பை (Technology News): ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சமீபத்திய நெட்வொர்க் சிக்கலால் பயனர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு ஈடுசெய்ய 2 நாட்களுக்கு இலவச வரம்பற்ற திட்டங்களை தற்போது வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் மும்பையில், அதன் டேட்டா சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் அதன் நெட்வொர்க் சேவைகளில் பெரும் செயலிழப்பு ஏற்பட்டது. ஜியோ நெட்வொர்க் (Jio Network) சிக்கலை பயனர்கள் சிலர் நெட்வொர்க் இல்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். Report Fish Disease App: மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்ற புதிய திட்டம்: அறிமுகமானது "மீன் நோய் செயலி".. விபரம் உள்ளே.!
இதனையடுத்து, ரிலையன்ஸ் ஜியோ அதன் நெட்வொர்க் செயலிழப்பை (Network Outage) ஏற்றுக்கொண்டது. நெட்வொர்க் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு 2 நாட்களுக்கு இலவச வரம்பற்ற திட்டங்களை வழங்கத் தொடங்கியது. இந்நிலையில், ஜியோ தங்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியதாக ஜியோ பயனாளர்கள் சிலர் பகிர்ந்துகொண்டனர். அந்த பதிவில், 'ஒரு நல்ல செயலாக, நாங்கள் உங்கள் எண்ணில் இரண்டு நாள் இலவச வரம்பற்ற (COMPLIMENTARY UNLIMTIED) திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.' இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டவுடன் ஜியோ பயனர்கள் இதனை அனுபவிக்க முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி:
Jio is giving a 2-day complimentary unlimited plan to compensate for the recent outage.
Have you also received this message?#RelianceJio #5G pic.twitter.com/GCdsMqdg9P
— Mukul Sharma (@stufflistings) September 19, 2024