Microsoft Layoff: 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்; விபரம் உள்ளே..!

தொழில்நுட்ப ஜாம்பவானாக கவனிக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்துள்ளது.

Microsoft Logo (Photo Credit: Wikipedia)

ஜூன் 04, கலிபோர்னியா (Technology News): உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக கவனிக்கப்படும் மைக்ரோசாப்ட், அசூர் கிளவுட் யூனிட்டில் வேலை பார்த்துவரும் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலின்போது வீட்டில் பணியாற்றும் சூழல் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு பின் அறிமுகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுப்டம் பலரின் வேலை இழப்புக்கு காரணமாக அமைந்தது.

100 பேர் பணிநீக்கம்: அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசூர் கிளவுட் யூனிட்டில் பணியாளர்களைக் குறைப்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இதனால் முதன்மை ஆபரேட்டர், மெஷின் இன்ஜினியர் உட்பட பல வேளைகளில் இருப்போர் பணிஓய்வுக்குட்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சுமார் 1500 பேருடன் இயங்கி வந்த யூனிட்டில் 100 பேர் வரை நீக்கப்படவுள்ளனர். AP Election Results 2024: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி முன்னிலை.. ஆட்சி மாற்றம்..! 

5 ஆண்டுக்குள் 90 ஆயிரம் பேர் பணிநீக்கம்: கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட அசூர் கிளவுட் உநிட் ஆபரேஷன், மெஷின் இன்ஜினியரிங், குவாண்டம் கம்பியூட்டிங், விண்வெளி ஆராய்ச்சி துறை சார்ந்த பணிகளுக்கு நிறுவப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஏஐ பயன்பாடு தற்போது அதிகரித்து வேலை வெட்டு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. மே மாதம் மட்டும் 39 நிறுவனங்களில் 9500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 2024ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 306 நிறுவனத்தால் 89333 ஊழியர்கள் பணிநீக்கப்பட்டுள்ளனர்.