ஜூன் 04, திருப்பதி (Andhra Pradesh News): ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்தியா தேர்தல்கள் 2024 , ஏழுகட்டமாக நடைபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. காலை 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 226 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரப்பிரதேசம் சட்டப்பேரவை நிலவரம்: இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி - பாஜக கூட்டணி கட்சிகள் 152 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. Lok Shaba Election Results 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயப்ரபாகரன் தொடர்ந்து முன்னிலை.!
பாஜக கூட்டணி முன்னிலை: ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என தெலுங்கு தேசத்துடன் மாநில அளவில் பாஜக மற்றும் ஜனசேனா தளம் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதனையடுத்து, ஆந்திராவில் பெரும்பான்மை வாரியாக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்பது ஏறக்குறையாக உறுதியாகியுள்ளது.
முடிவுக்கு வரும் ஜெகன்மோகன் ஆட்சி: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் ஆட்சியை பிடித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வருகிறது.