Mobile Service: மொபைலை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் செய்ய வேண்டியவைகள்.. விபரம் உள்ளே..!
மொபைலை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது முறையாக அனைத்து தரவுகளையும் பாதுகாப்பு படுத்தி விட்டு தர வேண்டும்.
ஆகஸ்ட் 19, மும்பை (Mumbai): மொபைலை சர்வீஸுக்கும் கொடுக்கும் போது யாருமே முறையாக பாதுகாப்புகளை செய்து கொடுப்பதில்லை. இதனால் முக்கியமான தரவுகள் அழிவதுடன், திருடப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் மொபைலை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது முறையாக அனைத்து தரவுகளையும் பாதுகாப்பு படுத்தி விட்டு தர வேண்டும்.
ஃபுல் பேக்-அப்: மொபைல்களை கடைகளில் சர்வீஸுக்கு தரும் போது அதிலுள்ள காண்டாக்ட் நம்பர்கள், போட்டா, வீடியோ, டாக்குமெண்டுகள், ஆடியோ போன்ற அனைத்தையும் பேக்கப் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வீஸ் செய்யும் போது அனைத்து தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கூகுளின் போட்டோஸ், டிரைவ், மெயிலில் பதிவேற்றிக் கொள்ளலாம். இது பழுது நீக்க தரும் போது தரவுகள் அழிந்தாலும் திரும்பி எடுத்துக் கொள்ளும் உறுதித் தன்மையை தருகிறது. UFO Sightings: அச்சச்சோ.. ஏலியன் வந்திருச்சு.. உள்ளூர் மக்கள் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சி தகவல்.!
லாக் அவுட்: இமெயில்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் பிற ஆப்களை லாக் இன் செய்வதற்கு பயன்படுத்தியிருப்போம். மேலும் அதில் யூஸ்சர் ஐடி, பார்ஸ்வேர் என பலவற்றை சேமித்து வைத்திருப்போம். இவைகளை அப்படியே வைத்திருக்கும் போது சர்வீஸிற்கு தர கூடாது. இவைகளின் பாஸ்வேர் மர்றும் யூஸர் ஐடியை மெயிலிலோ அல்லது குறிப்பேட்டிலோ நோட் செய்து வீட்டு அதனை முறையாக லாக் அவுட் செய்ய வேண்டும். பின் மின்னஞ்சல் உட்பட அனைத்து செயலிகளில் இருந்தும் லாக் ஆவுட் செய்து வெளிவரலாம். சர்வீஸ் செய்து முடித்த பிறகு மீண்டும் அவைகளில் இணைந்துக் கொள்ளலாம். சர்வீஸிற்கு கொடுக்கும் முன் பேக் அப் மிக அவசியம். மொபைலின் மெமரியில் உள்ள தரவுகளையும் பேக் அப் செய்து கொள்ள வேண்டும்.
சிம் & எஸ்டி கார்டு நீக்கம்: தேவையான தரவுகளை பாதுகாப்பாக சேமித்துக் கொண்ட பிறகு மொபைலில் இருந்து சிம் மற்றும் மெமரி கார்டை நீக்க வேண்டும். இவைகள் மொபைலில் இருக்கும் போது சர்வீஸின் போது ரீ செட் கொடுத்து விட்டால் தரவும் அழிந்துவிடும். இதனால் சிம் மற்றும் மெமரி கார்டை நீக்கி விட வேண்டும்.
செக்கியூரிட்டி லாக்: மொபைலின் லாக்கைத் தாண்டி பலரும் அனைத்து செயலிகளுக்கும் தனித்தனியாக லாக் வைத்திருப்பர். சரிவீஸிற்கு கொடுக்கும் போது அனைத்து டேட்டாக்களை பத்திரப்படுத்திவிட்டு லாக்குகளை எடுத்துவிட்டு தரவேண்டும். மொபைல்களை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி லாக் ஆகுவதாலும், அல்லது பழௌது நீக்குபவர் பாஸ்வேர்டை மறக்கவும் வாய்ப்புள்ளது. செக்யூரிட்டி லாக் இல்லாமல் சரீவீஸிற்கு கொடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் லாக் செய்து கொள்ளலாம். WhatsApp-GIPHY Partnership: வாட்ஸ்அப்பில் GIPHY ஸ்டிக்கர்ஸ் அறிமுகம்.. பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு..!
மொபைலை நோட் செய்து கொள்ளுங்கள்: எப்போதும் சரிசெய்ய மொபைலை கொடுக்கையில் அதை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு சில கடைகளில் மொபைலை மாற்றிக் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. IMEI நம்பரை நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த IMEI (International Mobile Equipment Identity) என்பது ஒவ்வொரு மொபைல்களுக்கும் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். இது 15 இலக்க எண்ணைக் கொண்டிருக்கும். இது ஒரே நிறுவத்தின் ஒரே மாடல் மற்றும் நிறத்தில் இருந்தாலும் கூட அடையாளம் காண முடியும். இந்த எண் மொபைலின் பேட்டரி பகுதிக்கு அருகில் இருக்கும். அட்டாச் போகளாக இருந்தால், *#06# என்ற எண்ணிற்கு கால் செய்ய வேண்டும். பின் மொபைலின் IMEI எண் குறுஞ்செய்தியாக வந்து விடும்.
ரீசெட் & அப்டேட்: அனைத்து தரவுகள் மற்றும் செக்யூரிட்டி வேலைகளை முடித்து விட்டு போனை ரீசெட் குடுக்க வேண்டும். இது போனில் உள்ள அனைத்து டேட்டா மற்றும் தேவையில்லாத ஸ்டோரேஜ்களை முழுவதுமாக அழித்துவிடும். இது ஒரு புதிதாக் அவாங்கின் மொபைலைப் போன்று மாற்றிவிடும். கடைகளில் மொபைல்களை சரிபார்த்த பின் ரீ செட் செய்து தான் தருவார்கள். ரீசெட் செய்வதற்கு முன் பேக் அப் செய்வது முக்கியம். ரீசெட் செய்த பின் மொபைலை அப்டேட் செய்ய வேண்டும். இது மொபைலில் புதிய பீச்சர்கள் கொண்டு வரும். இதனால் மொபைலும் புதிதாக காணப்படும். ரீஸ்டார்டையும் அப்டேட்டையும் கடைகளில் செய்து விடுவர். அவ்வாறு செய்யாத பட்சத்தில் நீங்களே செய்து விடுங்கள்.
மொபைலை சர்வீஸ் தரும் போது அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ள வேண்டும். தனித்தனியாக சர்வீஸ் செய்யாமல் அனைத்தை சரி செய்துக் கொள்ள வேண்டும்.