ஆகஸ்ட் 17, சென்னை (Technology News): மெட்டா நிறுவனத்திற்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப்பில், அதிகமான ஸ்டிக்கர்களைக் கொண்டு வர ஜிப்பி (GIPHY) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மெட்டா, வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஸ்டிக்கர்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, பயனர்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்க புதிய ஸ்டிக்கர் பேக்குகளைச் சேர்த்து வருகின்றது. இந்நிலையில், GIPHY மூலம், வாட்ஸ்அப்பில் மேலும் ஸ்டிக்கர்களை (Stickers) கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Isro’s SSLV-D3 Mission: இஸ்ரோவின் புதிய சாதனை.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்..!
இதன்மூலம், பயனர்களள் ப்ளே ஸ்டோர் (Play Store) அல்லது பிற ஸ்டோர் ஃபிரண்ட்கள் வழியாக ஆப்ஸை விட்டு வெளியேறாமல் அல்லது மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்குகளைத் தேடாமல் அதிக ஸ்டிக்கர்களைப் பெறுவதற்கான புதிய வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
GIPHY ஸ்டிக்கர்களைப் பெறுவது எப்படி?
வாட்ஸ்அப்பில், GIPHY ஸ்டிக்கர்களை பெற பின்பற்ற வேண்டிய படிநிலைகள்:
பிளே ஸ்டோரில், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் செய்துகொள்ளவும். இப்போது, வாட்ஸ்அப்பில் ஏதேனும் அரட்டை பக்கத்திற்கு செல்லவும்.
அதில் உரைப்பெட்டியில் உள்ள எமோஜி ஐகானைத் தொடவும். பின்னர், ஸ்டிக்கர்ஸ் விருப்பத்தைத் தட்டவும்.
அதன் மேல் இடது மூலையில் உள்ள தேடல் (Search) ஐகானை அழுத்தவும். அதில், நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரைத் தேடுங்கள்.