OnePlus Nord CE4 Lite India Launch: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

OnePlus Nord CE4 (Photo Credit: @TechnopatNet X)

மே 06, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE4 Lite) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போன் பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் (BIS website) காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிறப்பம்சங்கள்: இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ இன்-டிஸ்பிளேை கைரேகை ரீடர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 gen 1 SoC) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. International No Diet Day 2024: இன்றைக்கு எல்லாரும் சந்தோசமா சாப்பிடுங்க.. சர்வதேச உணவுக் கட்டுப்பாடு தினம்..!

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் வெளிவரும். 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.