மே 06, சென்னை (Chennai): உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவரின் உடல் நிலையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, குறிப்பாக உடல் பருமனைக் குறைக்கும் நோக்கத்திற்காக, உணவு உட்கொள்ளலை ஒழுங்குபடுத்துவதற்கான முதல் படியாகும். நாம் உண்ணும் உணவில், நமது செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றல் மூலங்களான மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் எனப்படும் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் ஆகியவை சமசீராக இருக்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டில் மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்று, தீவிர உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதாகும், இது கலோரி உட்கொள்ளலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது, உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்காகவே சர்வதேச உணவுக் கட்டுப்பாடு தினம் (International No Diet Day) ஒவ்வொரு ஆண்டும் மே 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: 1992 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பெண்ணியவாதியான மேரி எவன்ஸ் யங் (English feminist Mary Evans Young) என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது, இன்றைய நாள் உடல் தோற்றத்தை விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க தனிநபர்களை ஊக்குவிக்கிறது. மேலும் அனைவரும் தங்களது உடல்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி உணவுக் கலாச்சாரத்தின் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.