Paytm UPI Lite: பேடிஎம்மின் புதிய சேவை.. இதன் பயன்கள் என்னென்ன?.!
பேடிஎம் நிறுவனம் தற்போது பேடிஎம் யுபிஐ வாலட் என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.
மே 13, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர்.
பேடிஎம் யுபிஐ வாலட்: இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் தற்போது பேடிஎம் யுபிஐ (Paytm UPI) வாலட் என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூலம் இனி மக்கள் ஒரே க்ளிக்கில் Pin நம்பர் எனப்படும் கடவுச் சொல் இல்லாமல் ரூ.200 முதல் ரூ.4000 வரை செலுத்தும் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ளிமையான முறையில் மக்கள் பணத்தை பாதுகாப்பாக அனுப்ப இந்த பேடிஎம்லைட் உதவியாக இருக்கும். Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் செய்த அட்டகாசம்.. காவல் துறையினரால் அதிரடி கைது..!
உங்கள் ஆண்ட்ராய்டு / ஐபோனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும். பின்னர் ஹோம் ஸ்க்ரீனில் உள்ள யுபிஐ லைட் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு; உள்ளிட்ட விவரங்கள் சரியானது என்பதை உறுதிப்படுத்தவும். இப்போது உங்கள் யுபிஐ வேலட்டில் பணத்தை சேர்க்கவும். பிறகு ரூ.200 க்குள் என்கிற தொகைக்குள் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது, யுபிஐ லைட் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, பெறுநரின் யுபிஐ ஐடியை உள்ளிடவும் அல்லது க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும்.