ஜூலை 31, புதுடெல்லி (New Delhi News): என்.பி.சி.ஐ (NPCI) எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான புதிய விதிமுறைகளை அதிரடியாக அமலுக்கு கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் இந்திய தேச கொடுப்பனவுக் கழகம் சார்பில் பணப்பரிவர்த்தணையின் போது பணம் செலுத்தும் நபரின் பேங்கிங் அக்கவுண்ட் நம்பர் மட்டுமே காண்பிக்கப்படும் எனவும், பெயர்கள் போன்ற விஷயங்கள் இனி காண்பிக்கப்படாது எனவும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் யுபிஐ-ல் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி நாளை முதல் அமலுக்கு வரும் யுபிஐ கட்டுப்பாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..!
ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் யுபிஐ கட்டுப்பாடுகளின் லிஸ்ட்:
- ஜிபே(GPay), போன்பே(PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே அதிகபட்சமாக பேலன்ஸ் சரிபார்க்க இயலும். முன்னதாக நாம் விரும்பும் நேரத்தில் நமது பேலன்ஸ் சரிபார்க்க முடிந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதற்கு கட்டுப்பாடு வர இருக்கிறது.
- மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடர்பான விபரத்தை நாள் ஒன்றுக்கு 25 முறை மட்டுமே பார்க்கலாம்.
- இனி ஆட்டோ பேமென்ட் பரிவர்த்தனை எந்த நேரத்திலும் நடப்பதற்கு பதில் குறிப்பிட்ட நேரம் மட்டும் பரிவர்த்தனை நடைபெறும் செயல்முறைக்கு கொண்டு வரப்படும்.
- பரிவர்த்தனை நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அதனை மூன்று முறை மட்டுமே சரிபார்க்கலாம். ஒவ்வொரு முறை முயற்சிக்கும் இடையே 90 வினாடிகள் இடைவெளிக்கு பின்னர் அடுத்த முயற்சியை மேற்கொள்ளலாம்.