ஜூலை 27, புதுடெல்லி (Technology News): டிஜிட்டல் பணப்பரிமாற்றம் முறையில் யுபிஐ தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. நாடு முழுவதும் பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், கடந்த மே மாதத்தில் 25 இலட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றமும் நடந்துள்ளது. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, யுபிஐ பரிவர்த்தனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் யுபிஐ பரிவர்த்தனை :
நாளொன்றுக்கு இந்தியாவில் ரூ.60 கோடி யுபிஐ பரிவர்த்தனை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிதி செலவு அதிகமாகி வரும் நிலையில், மத்திய அரசால் இதனை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள இயலாது. யுபிஐ பரிவர்த்தனைக்கான செலவுகளை வணிகர்களிடம் அல்லது பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் சூழலும் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். ULLU, ALTBalaji Banned: உல்லு உட்பட 25 ஆபாச வெப்சைட்டுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. அதிரடி தடை..!
வரி விதிப்பு திட்டம் :
முன்னதாக நாடாளுமன்றத்தில் ரூ.2000 மேல் பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டபோது மத்திய அமைச்சரின் தரப்பில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் பரிந்துரையின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படலாம். தற்போது வரை எந்த பரிந்துரையும் அது தொடர்பாக வரவில்லை என தெரிவித்தார். இதனால் விரைவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.