Pregnancy Gadgets: கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் முழு லிஸ்ட் இதோ..!

கர்ப்பகாலத்தில் பெண்கள் பயன்படுத்துவற்கான சில சாதனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Pregnancy Gadgets: கர்ப்பமாக இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான அசத்தல் சாதனங்களின் முழு லிஸ்ட் இதோ..!
Pregnant Job (Pixabay)

அக்டோபர் 02, புதுடெல்லி (Tech Tips): கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் சிறிய செயல்கள் செய்வதற்கும் சற்று சிரமப்படுவர். அவைகளை எளிதாக்குவதற்காகவும் கர்ப்பிணிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதற்கும் பல பொருட்கள் (Wearable Pregnancy Devices) வந்து கொண்டு இருக்கிறது. அதில் சிலவற்றை வழங்குகிறோம்.

நர்ஸிங் பேட்: நர்ஸிங் பேட்கள் மார்பகங்களில் ஏற்படும் பால் கசிவை உறிஞ்சிக் கொள்ள பயன்படுத்தப்படும் பேட்கள் ஆகும். 8 மாதத்திற்கு மேல் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் கசியத் துவங்கும் அவர்கள் இந்த பேட்கள் பயன்படுத்தலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் நர்ஸிங் பேட்கள் பயன்படுத்தலாம். இதில் வாஷபல் பேட்களும் கிடைக்கின்றன. தாய்பால் கொடுக்கும் தாய்மார்களால் பேட் வைத்த பிராக்கள் பயன்படுத்த முடியவில்லை எனில் இது மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். Emergency Fund: உங்களிடம் “அவசர கால நிதி” இருக்கிறதா? உங்கள் நிம்மதிக்கான சூப்பர் நிதி..!

பிரகனன்ஸி பில்லோ: கர்ப்பம் தரித்த பெண்களால் சௌகரியமாக படுத்து உறங்க முடியாது. மல்லாந்து படுத்து உறங்கினால் சிசுவிற்கு பாதுகாப்பில்லை என்பதற்காக ஒருகளித்து படுத்து உறங்குவார்கள். 5 மாதங்களுக்கு மேல் வயிறு பெரிதாக உள்ல தாய்மார்களுக்கு கால்களை ஒன்றாக சேர்த்து படுத்து உறங்குவதும் கடினமாக இருக்கும். இதற்கு பிரகனன்ஸி பில்லோவை பயன்படுத்த வேண்டும். இது உடல் முழுவதையும் சுற்றி வலையமாக இருக்கும். இது ஒருகளித்து படுக்கையில் கால்களுக்கு இடையிலும் முதுகு வளைவிற்கு ஏற்ற விதத்தில் இருக்கும். இதை உடலின் சௌகரியத்திற்கு ஏற்ற வாங்கி பயன்படுத்தலாம்.

பெல்லி பேண்ட்: வயிற்றைச் சுற்றி கட்டப்படும் பேண்டுகள் வேக நடையில் ஈடுபடும் போதும், யோகா அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது சிசுவிற்கு ஏற்படும் அதிர்வை குறைக்கிறது. மேலும் இது இடுப்பு, அடிவயிற்றுப் பகுதியை முழுவதும் மூடுவதால் கர்பிணிகளுக்கு சுவை சற்று குறைவது போன்றும் காணப்படும். இதனுடன் அடிவயிற்றில் சேரும் தேவையற்ற கொழுப்பையும் தடுக்கிறது. முதுகிற்கு சப்போட்ர்டையும் அளிக்கிறது. டெலிவரி ஆன பின் விரைவில் குணமாக உதவுகிறது. வயிறு மற்றும் முதுகைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரத்தவோட்டத்தையும் சீரக்குகிறது. வேகு நேரம் அணியாமல் வேலையில் ஈடுபடும் போதும் மட்டும் இதை அணியலாம். மருத்துவரின் ஆலோசனை கேட்டு இதை பயன்படுத்தவும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிறு பெரிதாக இருப்பதால் அவர்களால் சுயமாக தங்களை, சிறுநீர் அல்லது மலம் கழித்த பின் சுத்தம் செய்ய சிரமப்படுவதுண்டு. இதற்காக இந்த ஸ்பிரே பிடட் பயன்படுத்தலாம். இது எளிதாக இருப்பதால், வெளியிடங்களில் பயன்படுத்துவதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இதை மலையேற்றம், தொலைதூரம் போன்ற பயணத்தில் அனைத்து வயதினரும் பயன்படுத்தும் சாதனமாகும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement