Money (Photo Credit: PTI)

அக்டோபர் 01, புதுடெல்லி (Finance Tips): விபத்து, உடல்நலக்குறைவு போன்ற மருத்துவச்செலவுகள் மற்றும் வேலையிழப்பு, தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள் போன்றவை எப்போது வேண்டுமானலும் ஏற்படலாம். இந்த எதிர்பாராத நிகழ்வுகளின் போது உங்களின் தேவைகளை சமாளிக்க கைகொடுக்க கூடியது தான் அவசர கால நிதி. மாதச்சம்பளம் வாங்கும் அனைவரும் இந்த அவசரகால நிதி (Emergency Fund) சேமித்து வைப்பது மிக அவசியம். வயதிற்கு ஏற்றவாறு இந்த அவசரகால நிதியை சேமித்து வைக்க வேண்டும். Solar Eclipse 2024: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்... வானின் விந்தைகளை காணத்தவறீடாதீங்க..!

எந்த வயதிற்கு எவ்வளவு?:

  • 25 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் குறைந்தது அவர்களின் ஆறுமாத சம்பளத்தை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ள வேண்டும் . நீங்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது, அது உங்களுக்கு தேவைப்படும்.
  • 40 வயது முதல் 60 வயதுடையவர்கள் குறைந்தது ஆறு முதல் ஒரு வருட சம்பளத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 40 வயதைத் தாண்டும் போது மருத்துவ செலவுகளும், அவசர செலவுகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
  • 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 1-2 வருட அல்லது 18 மாத சம்பளமாக இருந்தாலும் சரி ஓய்வூதியமாக இருந்தாலும் சரி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வயதில் எதிர்பாராத மருத்துவச்செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.