Best Budget Apps: பட்ஜெட் போட்டு வாழ சிறந்த ஆப்.. உடனே இன்ஸ்டால் பண்ணுங்க..!
பட்ஜெட் போட்டு வாழ சிறந்த ஆப் என்னவெல்லாம் உள்ளது என்று இப்பதிவில் காணுங்கள்.
மே 15, புதுடெல்லி (New Delhi): டிஜிட்டல் யுகத்தில் எல்லாவற்றிற்கும், மொபைல் ஆப் தான். காய்கறி வாங்குவதிலிருந்து பாடம், சமையல், வெளியுலக நடப்பு என அனைத்தையும் ஆஃபுகள் தான் சொல்லி தருகின்றன. முன்பெல்லாம் சில வீடுகளில் மாத வீட்டுக்கணக்கை எழுதிவரும் பழக்கம் இருந்தது. இன்றைய காலத்தில் பெரும்பாலும் இணையம் மூலம் செலவளிப்பதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு பணத்தை வீணடிக்கிறோம். அதனால் தான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் மொபைல் ஆஃபிலேயே வரவு செலவுக் கணக்குகளை போடவும், நாம் செலவு செய்யும் பணத்தை துள்ளியமாக கண்காணிக்கவும் இது போன்ற செயலிகள் பெரிதும் உதவுகிறது. இதனால் நம் பணத்தை கவனமாக செலவளிக்க முடியும்.
Wallet Mobile App: பட்ஜெட் மேக்கர்ஸின் வாலட் ஆப் 6.5 மி பயனர்களை கொண்டுள்ளது. இந்த செயிலியில் நம் மாத, வார, நாள் கணக்கைக் கணக்கிடலாம். ஒரு குறிப்பிட தொகையையோ அல்லது நம் மாத வருமானத்தையோ செட் செய்ய வேண்டும். பின் தினமும் செலவாகும் கணக்கை அதில் குறிப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். நம்மால் நம் செலவளிக்கும் கணக்கை லிமிடட் ஆக செட் செய்யலாம். நாம் அளவுக்கு மீறி செலவு செய்தால் நோட்டிஃவிகேசன் வந்துகொண்டே இருக்கும். நாம் சாதாரணமாக உணவிற்கு 10 ரூபாய் செலவளித்தாலும் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதற்காக உணவு,வீடு, வாகனம், ஷாப்பிங், என அனைத்திற்கும் தனித் தனியாகப் பிரிவுகள் உள்ளது. அத்துடன் நம் வங்கி கணக்கையும் இதில் இணைத்துக் கொள்ள முடியும். இ.எம்.ஐ, ஒருவருக்கு பணம் மாற்றிய விவரம் அனைத்தையும் தானாகவே அப்டேட் செய்து விடும். Cannes Film Festival 2024: அமோகமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. பங்கேற்ற திரை பிரபலங்கள்..!
Day to day expenses app: இந்த செயலியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். மாத வருமானத்தை உள்ளிட்டு தினசரி கணக்குகளைக் குறித்து வைத்து வர வேண்டும். அதை இச்செயலி எதில் நாம் அதிகமாக செலவளிக்கிறோம், மாத சேமிப்பு எவ்வளவு என சதவீதத்துடன் தெரிந்து கொள்ளலாம். தினசரி செலவை அட்டவணையிட்டு தனிதனிப் பிரிவாகக் காட்டுகிறது.
Varavu selavu App: தமிழ் செயலியான வரவு செலவு கணக்கு, அனைத்து வகையான மக்களும் பயன்படுத்தும் வகையில் தமிழிலேயே அமைந்துள்ளது. 2,400 பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் நம் மாத, வார வருமானத்தை செட் செய்துவிட வேண்டும் பின் நாம் செலவளிக்கும் பணத்தை அவ்வப்போது பதிவு செய்து வரலாம். இது வரவு செலவை கணக்கிட்டுக் கொண்டே வரும். இதனால் நம் செலவை கண்காணிக்க முடியும். எந்த நாளில் எவ்வளவு செலவு செய்தோம் என்று திரும்பிப் பார்க்கவும் முடியும்.
My money track expense: 1 லட்சத்திற்கு மேல் பயனாளர்களை கொண்ட இந்த செயலியில், வங்கி கணக்குகளை இணைத்து சரியாக கணக்கு போடலாம். வரைபடமாக நம் செலவுகளை காட்டும்.வருமானதிற்கும் தனிதனி பிரிவுகளை உருவாக்கலாம். இந்த செயலி கடைக்காரர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.