Yes Bank Layoffs: யெஸ் வங்கி ஊழியர்கள் 500 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?.!
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ், சுமார் 500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): தனியார் வங்கியான யெஸ் வங்கி (Yes Bank), மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 பணியாளர்களை பணிநீக்கம் (Layoff) செய்துள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யெஸ் வங்கி செய்தித் தொடர்பாளர், பணியாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தும், வங்கியின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார். International Day against Drug Abuse and Illicit Trafficking: "விஷத்தை அமுதாய் விழுங்கிட எப்படி முடிகிறது?" சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்..!
இதற்கிடையே இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் யெஸ் வங்கி பங்கு 0.42 சதவீதம் அதிகரித்து 24.11 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு 75,580 கோடி ரூபாயாக உள்ளது.