TikTok Layoffs: டிக்டாக் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
சமூக ஊடக தளமான டிக்டாக் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 11, டெல்லி (Technology News): டிக்டாக் நிறுவனம் (TikTok) நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் (Layoff) செய்ததாக கூறப்படுகின்றது. நிறுவனம் ஏஐ (AI) அம்சத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பணிநீக்கங்கள் மூலம் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும் முடிகிறது. டிக்டாக் அதன் உலகளாவிய பணியாளர்கள் முழுவதும் பணிநீக்கம் செய்கிறது. மலேசியாவில் மட்டும் சுமார் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Star Health Data Breach: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்பனை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
டிக்டாக் நிறுவனத்தின் உரிமையாளரான சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), நாட்டில் 500-க்கும் குறைவான ஊழியர்களே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள 200 நகரங்களில் சுமார் 1,10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பணிநீக்கங்கள் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி மேம்படும் என்று இந்த பணிநீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.