Star Health Insurance Logo | Hacker File Pic (Photo Credit: Facebook | Pixabay)

அக்டோபர் 10, டெல்லி (Technology News): நாட்டின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் (Star Health) நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தரவு டெலிகிராமில் உள்ளது என்ற செய்திகள் வெளியானதையடுத்து, ஹேக்கர் (Hacker) ஒருவர் தனது 3.1கோடி வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான 7.24 டிபி டேட்டா முழுவதையும் யுஎஸ்டி 1,50,000-க்கு விற்பனைக்கு வைத்துள்ளார். Nobel Prize 2024: வேதியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!

XenZen என்ற ஹேக்கர் இணையதளத்தில், ஸ்டார் ஹெல்த் இந்தியா வாடிக்கையாளர்களின் அனைத்து தரவுகளையும் விற்பனைக்கு வைத்துள்ளார். மேலும், இந்த தரவுகளை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் ஒருவர் தான் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை, நேரடியாகவே டெலிகிராமில் (Telegram) சரிபார்த்துக் கொள்ளலாம். கசிந்த தரவுகளில் முழுப் பெயர்கள், பான் எண்கள், மொபைல் எண்கள், மின்னஞ்சல், பிறந்த தேதி, முகவரி, காப்பீடு செய்யப்பட்ட பெயர்கள், பாலினம், முன்பே இருக்கும் நோய்கள், பாலிசி எண்கள், நாமினி பெயர்கள், வயது, நாமினி உறவு, உடல் எடை, பிஎம்ஐ மற்றும் பிற தரவுகள் வெளிவந்துள்ளன.

இவையனைத்தையும், ஹேக்கர் இணையதளத்தில் இரண்டு தனித்தனி செயலியில் உள்ள சாட்போட்களில், ஸ்டார்ட் பட்டனை அழுத்திய பிறகு கூறப்படும் தரவை பெற்றுக் கொள்ளலாம். தரவு கசிவு முதன்முதலில் தெரிவிக்கப்பட்ட பிறகு, காப்பீட்டு (Insurance) நிறுவனமான ஸ்டார் ஹெல்த் சமூக ஊடக தளமான டெலிகிராம் மற்றும் ஹேக்கருக்கு எதிராக புகார் அளித்துள்ளது.