Realme C51 Launch: பிளிப்கார்டில் நள்ளிரவு தொடங்குகிறது ரியல்மி C51 விற்பனை; பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஸ்மார்ட்போன்..! விபரம் இதோ..!
நள்ளிரவு 12:00 மணியளவில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C51 பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக ரியல்மி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11, புதுடெல்லி (Technology News): இந்திய சந்தையில் தனது புதுப்புது ஸ்மார்ட்போன்களின் மாடல்களை அறிமுகம் செய்து, விற்பனை மற்றும் மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் ரியல்மி (Realme Smartphones).
சீன தயாரிப்பு நிறுவனமாக ரியல்மி (Realme) இருந்தாலும், கடந்த 2018ன் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன், இன்று வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தயாரிப்பு நிறுவனத்திடையே நல்ல வருவாயை ஈட்டுவதால், விற்பனையும்-தயாரிப்பும் ஒருசேர தொடங்குகிறது. Monkey on Hospital: மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு; தடியை எடுத்து விரட்டும் மருத்துவர்.. டெல்லியில் நடந்த பகீர் சம்பவம்.!
தற்போது ரியல்மி நிறுவனம் தனது Realme C51 ஸ்மார்ட்போனை இன்று நள்ளிரவு 12 மணியளவில் அறிமுகம் செய்கிறது. ரியல்மி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக 50 MP கேமரா, 5 MP செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி திறன், 33 W SUPERVOOC சார்ஜர் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
8GB வரை அதிகரித்துக்கொள்ளக்கூடிய Dynamic RAM 4GB RAM வடிவில் 64 GB Internal Memory Storage-உடன் வழங்கப்படுகிறது. 2TB வரையில் நாம் மெமரி கார்டை பயன்படுத்தலாம். பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்றாற்போல, இந்திய மதிப்பில் ரூ.8,999 க்கு Realme C51 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. Flipkart தளத்தில் இன்று நள்ளிரவு 12:00 மணிமுதல் விற்பனை தொடங்குகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)