Online Gaming Framework By Modi Government: பந்தயம், அடிமையாக்கும், தீங்கு ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு இனி தடை வருகிறது - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
பந்தய விளையாட்டுகள், பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது அடிமையாக்கும் விளையாட்டுகளுக்கு இனி அனுமதி கிடையாது.
ஜூன் 13, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி (Technology) அபரீதமாகியுள்ள நிலையில், அது சார்ந்த பிரச்சனைகளை இந்தியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் தொழில்நுட்ப விஷயங்களில் மத்திய அரசு (Central Govt) தேவையான பலஅடுக்கு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிரான வேலைகளை செய்யவும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களின் முயற்சிகளை அரசு திறம்பட கண்டறிந்து அழித்து வருகிறது.
இந்த நிலையில், ஆன்லைன் கேம் (Online Games) விளையாட்டுகள் மூலமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஆன்லைன் கேம்களில் அது சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, பந்தய விளையாட்டுக்களால் பல பிரச்சனை ஏற்படுகிறது என்றும் பல தகவல்கள் அரசுக்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து, ஆன்லைன் கேம் விளையாட்டுகளுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "ஆன்லைன் கேமிங் கட்டமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோம். இவற்றின்படி 3 வகையான விளையாட்டுகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்படமாட்டாது. பந்தய விளையாட்டுகள், பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது அடிமையாக்கும் காரணிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு இனி தடை விதிக்கப்படும்" என தெரிவித்தார்.