Dindigul I Periyasamy | ED Logo (Photo Credit: @IPeriyasamy_ X / Wikipedia)

ஆகஸ்ட் 16, சென்னை (Chennai News): சட்டவிரோத பணப்பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ஐ. பெரியசாமியின் மீது புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் இருக்கும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை (ED Raid) நடைபெற்று வருகிறது. அவருக்கு சொந்தமாக சென்னை, மதுரை, திண்டுக்கல்லில் உள்ள நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Pudukkottai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை மூச்சுமுட்டி உயிரிழப்பு.. தாய்மார்களே கவனம்.! 

அமைச்சர் வீட்டில் சோதனை:

திண்டுக்கல்லில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. முன்னதாகவே ஈடி சோதனை ஐ. பெரியசாமி வீட்டில் நடைபெற்ற நிலையில், 9 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முறைகேடான சொத்துக்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து இருந்தனர். இந்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறையினர் சோதனை:

வீடியோ நன்றி: நியூஸ் 18 தொலைக்காட்சி