Verizon Layoffs: வெரிசோன் நிறுவனம் 5,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா..? ஊழியர்கள் அதிர்ச்சி..!
அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 16, நியூயார்க் (Technology News): அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) கம்யூனிகேஷன்ஸ், மார்ச் 2025-க்குள் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் செப்டம்பரில் பாதி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெரிசோன் பணிநீக்கங்கள் சுமார் 4.5 பேரை பாதிக்கும் என்று கூறப்படுகின்றது. TATA Motors: ரூ.9000 கோடி செலவில் டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை., 5000 பேருக்கு வேலை.. தமிழக இளைஞர்களே தயாராகுங்க.!
இந்நிலையில், மூன்றாம் காலாண்டில் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெரிசோன் நிறுவனம் கூறியது. தன்னார்வப் பிரிவினைத் திட்டத்தின் (Voluntary Separation Program) கீழ் வெரிசோன் பணிநீக்கம் காரணமாக சுமார் 4,800 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வெரிசோன் கம்யூனிகேஷன் டிசம்பர் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி முழுநேர ஊழியர்களாக 1,05,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இதில், கிட்டத்தட்ட 1.05 லட்சம் பணியாளர்களில், 89% பேர் அமெரிக்காவில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான (Telecommunication Company) வெரிசோனின் தன்னார்வப் பிரிவினைத் திட்டத்தின் உதவியுடன் பணியாளர்களைக் குறைப்பதை மேற்கொண்டது. இது கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடர்ந்து, வெரிசோன் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கத் தொடங்கியது.