TATA Motors | Ranipet Collector Office (Photo Credit: Wikipedia / ranipet.nic.in/ta/)

செப்டம்பர் 16, ராணிப்பேட்டை (Ranipet News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று, அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வந்தார். இதன் வாயிலாக வரும் ஆண்டுகளில் ரூ.7816 கோடி செலவில், 19 நிறுவனங்கள் தமிழகத்தில் தனது நிறுவனங்களை அமைகிறது. சில நிறுவனங்கள் தனது ஆலையை விரிவாக்கம் செய்யவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், போர்டு (Ford) நிறுவனம் மறைமலைநகரில் இருக்கும் தனது தொழிற்சாலையில், மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஏற்பாடுகளை செய்துள்ளது. Today Gold Sliver Price: ரூ.55 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் & வெள்ளி விலை இதோ.! 

செப்.28ம் தேதி அடிக்கல் நடப்படுகிறது:

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் டாடா மோட்டார்ஸ் சார்பில், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையானது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அமைகிறது. ரூ.9000 கோடி செலவில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையும் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 28ம் தேதி அடிக்கல் நாட்டி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிறுவனத்தின் வாயிலாக சுமார் 5000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் ரூ.400 கோடி செலவில், 250 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மெகா காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

டாடா மோட்டார்ஸ்:

டாடா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் இயந்திரங்கள் உற்பத்தி பிரிவான டாடா மோட்டார்ஸ், பல்வேறு ரக கார்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுத்தி வருகிறது. இந்திய சந்தைகள் மட்டுமல்லாது அயல்நாட்டு சந்தையிலும் முன்னணி பெற்றுள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் ஜாகுவார் கார் உற்பத்தி மையம், ராணிப்பேட்டையில் அமைவது தமிழர்களின் வேலைவாய்ப்பை பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.