Refrigerator Not Cooling: உங்கள் பிரிட்ஜ்ஜில் கூலிங் பிரச்சனை இருக்கிறதா? அப்போ கண்டிப்பாக இந்த காரணம் தான்.!
பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விசயங்களைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
பிப்ரவரி 06, சென்னை (Chennai): இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எல்லா வீடுகளிலும் ஒரு பிரிட்ஜ் ஆவது இருக்கும். அப்படிப்பட்ட உங்கள் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறைந்துவிட்டதாக கருதினால், காரணம் இதுவாக தான் இருக்கும்.
உங்கள் பிரிட்ஜ்ஜில் சரியான டெம்ப்பிரேச்சரை செட் செய்வது முக்கியம். பிரிட்ஜ் இன் டெம்ப்பிரேச்சர் 4°C ஆகவும், பிரீசர் டெம்ப்பிரேச்சர் 0°C அல்லது -18°C -க்குள் இருக்க வேண்டும். பிரிட்ஜ் டோர்களை சரியாக மூடவும். மேலும் பிரிட்ஜ் இன் கதவில் இருக்கும் காஸ்கெட்டை கொஞ்சம் கவனியுங்கள். டோர் காஸ்கெட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது ஓட்டைகள் இருந்தால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் நிலையாக இருக்காது. How To Increase Hemoglobin Levels: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும்?. அதனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்..!
பிரிட்ஜ்ஜில் அதிகமான பொருட்களை திணிக்க கூடாது. அதாவது இடைவெளியே இல்லாமல், அடைசல் போல பொருட்களை பிரிட்ஜ்ஜினுள் திணிக்க கூடாது. மேலும் உங்கள் பிரிட்ஜ்ஜின் பிரீஸரில் படியும் ஐஸ்களை உடனுக்குடன் நீக்கம் செய்வது முக்கியமானது. பிரிட்ஜ்ஜின் கன்டென்சர் காயில்-களை சுத்தமாக வைப்பதும் முக்கியமானது. இந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறையாது.