Fridge (Photo Credit : Pixabay)

ஜூன் 26, சென்னை (Cleaning Tips): நமது வாழ்வின் முக்கிய பகுதியாகிய பிரிட்ஜ் உணவை சேமிக்கவும், கெட்டுப்போகாமல் தடுக்கவும், ஐஸ்கட்டி, குளிர்ந்த நீர், பழச்சாறு போன்ற விஷயங்களை பதப்படுத்தவும் பயன்படுகிறது. மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் அதிகம் தேவைப்படும் பிரிட்ஜ் பருவகாலத்தில் அதிக வெப்பம், ஈரப்பதம் போன்ற பிரச்சனையால் நேரடியாக பாதிக்கப்படாது என்றாலும், நாம் சேமிக்கும் உணவு பொருட்களால் அது பாதிக்கப்படும். நாம் சேமித்து வைக்கும் பொருள்களில் உண்டாகும் மாற்றம் பிரிட்ஜ் முழுவதும் ஏற்படும். பெண் பக்தை மீது விபூதியடித்து விளையாட்டு.. கோவில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ.! 

ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றம் சரியாக டிப்ஸ்:

இதனால் பிரிட்ஜில் ஒரு சில நேரம் துர்நாற்றம் போன்றவையும் வீசும். ஃப்ரிட்ஜ் திறந்ததும் ஒரு சில காலங்கள் நல்ல நறுமணம் இருக்கும். பின்னால் படிப்படியாக குறைந்து நாம் சேமிக்கும் பொருளை பொறுத்து அது மாறும். குறிப்பாக புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை போன்றவற்றை சேமித்து வைக்கும் போது நல்ல நறுமணம் இருக்கும். பழைய குழம்பு, மாவு போன்றவற்றை சேமித்து வைக்கும் போது அதன் நறுமணம் மாறிக்கொண்டு வரும். இந்த வகை பிரச்சனையிலிருந்து விடுதலை பெற ஒரு அருமையான வழி உள்ளது. அதனை கையாண்டால் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றம் சரியாகும்.

தேவையான பொருட்கள் :

வினிகர்,

சமையல் சோடா,

எலுமிச்சை சாறு,

காபி தூள்,

ஸ்பாஞ்ச்.

செய்முறை :

நாம் எடுத்துக் கொண்ட பொருட்களை முதலில் தண்ணீரில் சேர்த்து கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அந்த தண்ணீரை வைத்து அதனை ஸ்பான்ச்சில் முக்கி பிரிட்ஜுக்குள் 2 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை வைத்திருக்க வேண்டும்.

காலையில் அதனை திறந்தால் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை ஸ்பாஞ்ச் தனக்குள் இழுத்துக் கொள்ளும். இதனால் ஃப்ரிட்ஜில் நறுமணம் ஏற்படும். வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வதும் துர்நாற்றத்திலிருந்து விடுபட வழிவகை செய்யும்.