நவம்பர் 06, சென்னை (Chennai News): இன்றளவில் பலரின் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி என்ற பிரிட்ஜ் பயன்பாட்டில் இருக்கிறது. கடையில் வாங்கப்படும் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், பிஸ்கட், கேக், பிரட், சாக்லேட், மாவு, மீந்துபோன உணவுகள் என ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கேற்ப அதனை பயன்படுத்தி வருகின்றனர். உணவுப்பொருட்களை குறிப்பட்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள பயன்படுத்தும் பிரிட்ஜ் ஒருசில நேரம் சரிவர கூலிங் ஆகவில்லை என்ற புகார் இருக்கும். இதுகுறித்து நிபுணர்கள் சொல்லும் ஒருசில தகவலுடன், அதற்கான காரணங்களையும் நாம் தெரிந்துகொண்டால், அதனை சரிசெய்ய முடியும். GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
பிரிட்ஜ் கூலிங் ஆக கீழ்காணும் விஷயங்களை பின்பற்றவும்:
பிரிட்ஜின் கதவில் இருக்கும் வெடிப்புகள், ஓட்டைகள் காரணமாக கூலிங் குறையலாம். இதனால் மின்சாரமும் அதிகம் செலவாகும் சூழல் உண்டாகும். பிரிட்ஜின் கதவுகளை சரியாக மூடாமல் இருப்பதும் கூலிங் குறைய வழிவகை செய்யும். ஆகையால், ஒவ்வொரு முறையும் பிரிட்ஜை பயன்படுத்திவிட்டு சரியாக மூடி வைத்தோமா? என்பதை சோதனை செய்ய வேண்டும். கூலிங் குறையக்குறைய பிரிட்ஜ் மீண்டும் கூலிங்கை உண்டாக்க செயல்பட்டு அதிக மின்சாரத்தை எடுக்கும். அடிக்கடி இவ்வாறான செயல் தொடர்ந்தாள் பிரிட்ஜ் விரைந்து பாழாகிவிடும். பிரிட்ஜின் வெப்பநிலை எப்போதும் 4 டிகிரி செல்சியாசாகவும், பிரீஸரில் வெப்பநிலை 0 டிகிரியாகவும் இருக்கும். அதேபோல, பிரிட்ஜில் அதிக பொருட்களை அடுக்கி வைக்க கூடாது. சமமான இடைவெளியில் பிரித்து வைக்க வேண்டும். அவ்வப்போது டீ-பாரஸ்ட் எனப்படும் ஐஸ்கட்டி பகுதியை உருக்கும் பட்டனை பயன்படுத்த வேண்டும். மின்சார இணைப்பு சரியாக உள்ளதா? எலி ஏதேனும் கடித்து வைத்துள்ளதா? என்பதையும் சோதிக்க வேண்டும்.