செப்டம்பர் 02, சென்னை (Health Tips): உணவு சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தவும், மீதமான உணவை சேகரித்து மறுநாள் சாப்பிடவும் பல வீடுகளில் குளிர்சாதன பெட்டி பிரதானமாக பயன்படுகிறது. குறிப்பாக இட்லி, தோசை மாவுகளை (Idli Dosa Batter) சேகரிக்க பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். முதல் நாள் அரைக்கும் மாவை இட்லி, தோசைக்கு பயன்படுத்திவிட்டு எஞ்சியதை பிரிட்ஜில் சேகரித்து பல நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக அரைக்கும் மாவை அதிகபட்சம் 1 முதல் 2 நாட்கள் பிரிட்ஜில் வைத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
புளித்த மாவில் இட்லி, தோசை:
இன்றுள்ள தொழில்நுட்ப உலகில் உணவு சமைக்க சுலபம், வேலை மிச்சம், நேரமின்மை என பல காரணத்தால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடுகின்றனர். இதனை இட்லி, தோசை போன்ற உணவுகளை சமைக்கவும் பயன்படுத்துகின்றனர். இதனால் மிகப்பெரிய ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் புளித்த மாவில் இட்லி, தோசை என சமைத்து சாப்பிடுவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Gandhi Jayanti 2025: மகாத்மா காந்தியின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு.. உங்களுக்கான காந்தி ஜெயந்தி கட்டுரை இதோ.!
உடலுக்கு கேடுதரும்:
அதாவது, உணவின் சத்து உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், முடிந்தளவு அந்த பொருளை தயாரித்தும் சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில், அதன் காலம் செல்லச்செல்ல சத்துக்கள் மாறுபடும். ஒருசில நேரம் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கும் வழிவகை செய்யும். 2 நாட்களை கடந்த மாவில் உணவு சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல. மாவின் புளிப்புத்தன்மை செயல் தடுக்கப்படும் என மக்கள் நினைப்பது தவறு. அது புளித்து உடலுக்கு கேடு விளைவிக்கும் பழைய மாவாக மாறும்.
உடல்நல கோளாறுகள்:
புளித்த மாவில் உணவு சாப்பிடுவதால் கார்பன் டை ஆக்ஸைடு வாயு ஏற்படும். பிரிட்ஜில் வைக்கப்பட்ட பழைய மாவில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கும். அது வாயு தொல்லை, செரிமான சிக்கல், வயிறு சார்ந்த பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைக்கு வழிவகை செய்யும். அதில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இருக்காது. அதனால் இவ்வாறான மாவை சாப்பிடுவதில் நன்மை இல்லை.